ப.மதியழகன்/கோலம்

எனக்கு கிறுக்கல்களாகத்தான்
தோன்றும் அம்மாவின் கோலங்கள்
அம்மாவுக்கு எல்லா மாதமும்
மார்கழி தான்
அடுக்களை வேலை முடிந்தவுடன்
கோலப்புத்தகத்தோடு தபஸ் பண்ண
ஆரம்பித்துவிடுவாள்
அம்மாவால் முன்பு போல்
விடியற்காலையில் கண்விழிக்க
முடிவில்லை
தர்மபத்தினியின் உபயத்தால்
கிழக்கு வெளுத்த பிறகுதான்
இப்போது கோலமெல்லாம்
ஆனாலும் அம்மாவின் கைகள்
சும்மா இல்லை காகிதத்தில்
கோலங்களை வரைந்து
கொண்டுதான் இருந்தது
ஒருமுறை அவள் சுகவீனமாக
இருக்கும்போது
நோட்டுப் புத்தகத்தை
புரட்டிப் பார்த்தேன்
முன்பு கிறுக்கல்களாகத்
தெரிந்தது
இப்போது தான் எனக்கு
கோலமாகத் தெரிந்தது
அம்மாவைப் பார்த்தேன்
உறக்கத்திலும் அவளது கைகள்
அனிச்சையாக அசைந்து
கொண்டிருந்தது.

One Comment on “ப.மதியழகன்/கோலம்”

Comments are closed.