
வாசலில் இடுவது மாக்கோலம்
வார்த்தையில் இடுவது பாக்கோலம்
பரம்பொருள் தந்தது ஒளிக்கோலம்
பாரிது கொண்டது களிக்கோலம்
பாவையர் இடுவது இழைக்கோலம்
பாவியர் இடுவது பிழைக்கோலம்
வானகம் கொண்டது மழைக்கோலம்
கானகம் பெற்றது தழைக்கோலம்
மேகங்கள் சேர்ந்தால் கார்க்கோலம் – அவை
மேனி சிலிர்த்தால் நீர்க்கோலம்
வீரன் கொள்வான் போர்க்கோலம் – அவன்
வெற்றியில் காண்பான் தேர்க்கோலம்
தீயவர் இடுவது அவக்கோலம் – உளத்
தூயவர் கொள்வது தவக்கோலம்
மேதையர் இடுவது மதிக்கோலம் – எங்கள்
மாயவன் இடுவது விதிக்கோலம்
பாவலர் எழுதுவர் கவிக்கோலம் – நம்
பரமன் செயலோ புவிக்கோலம்
பக்தியில் வருவது இசைக்கோலம் – நல்ல
பகலவன் தந்தது திசைக்கோலம்
அருமையாய்ச் செழிக்கும் பயிர்க்கோலம் – வா!
அன்பிலே தழைக்கட்டும் உயிர்க்கோலம்
வழுவிலாதெழுதுங்கள் அகக்கோலம் – பின்
வாழ்வினில் எல்லாம் சுகக்கோலம்!

சாய் ரேணுமா உங்கள் கவிதை பிரமாதம்.