
புத்தகக் காட்சியில் உட்கார்ந்தபோதுதான் இந்த எண்ணம் தோன்றியது. தமிழில் குறிப்பிட வேண்டிய கவிஞராய் ஞானக்கூத்தனைக் கருதுகிறேன். 1988 ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தபோது ஒவ்வொரு இதழ் வரும்போதும் ஞானக்கூத்தன் கவிதை வரவேண்டுமென்று நினைப்பேன் . அதனால் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணியில் உள்ள அவர் வீட்டிற்குச் சென்று ஒரு கவிதை வாங்கி அச்சுக்குக் கொடுப்பேன். ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகள் ஆத்மாநாமின் ழ பத்திரிகையில் வந்ததைவிட விருட்சத்தில் ஆதிகம் வந்திருக்கின்றன. அவருடைய மொத்தக் கவிதைத் தொகுதியையும் விருட்சம் மூலமாகக் கொண்டு வருவது பெரிய சவாலாக இருந்தது. அவர் வாழ்நாள் இறுதியில் இம்பர் உலகம் என்ற தொகுப்பைக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு கவிதையும் எந்தந்த ஆண்டில் வெளிவந்தது என்ற தகவல் என் தொகுப்பில் இருக்கும்.
வாழ்நாள் முழுவதும் கவிதையைப் பற்றி சிந்தனை கொண்ட ஞானக்கூத்தனுக்குச் சரியான கவனம் கிடைக்கவில்லை. அவருடைய நினைவாக இந்தப் போட்டியை
அறிவித்து வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டேன்.
தேர்வு பெற்ற கவிஞர்கள்
- இராம மீனாட்சி சுந்தரம் – இயற்கை ஈந்திடும் பேரானந்தம்
- கி.சரஸ்வதி – ஜன்னலற்றவன்
- லட்சுமி பாலா – முணுமுணுக்கும் பக்கங்கள்
- கலாவதி பாஸ்கரன் – நிறம்
- அன்பாதவன் – ஏதிலியாய் அலையும் மியாவ் குட்டி
- பி.ஆர்.கிரிஜா – எண்ண அலைகள்
- துரை.தனபாலன் – தலைமுறை பேதம்
- எஸ்ஸார்சி – கவியுளம்
- ஆர்.கே.இராமநாதன் – உம்மால்
- இரா.காசிநாதன் – அதே பெஞ்ச்
- கருமலைப் பழம் நீ – அது மட்டும்தான்
- ஆ.ச.கந்தன் – காதலராய் மட்டும் இருப்பார்
- ராஜ.கிருஷ்ணன் – சந்ததி
- பானுமதி ந – படகுகள்
- மதுவந்தி – கடலிடம் விடை பெறுதல்
- ஜெ.பாஸ்கரன் – மழை விட்டது
- நாகேந்திர பாரதி – பருவ மாற்றம்
- தங்கேஸ் – கடைத்தேற்றும் வெறுமை
- ஏ.எப்.எம்.றியாட்- சுயமாக இருக்க விடுங்கள்
- வே. சரஸ்வதி உமேஷ் – சிக்கனம்
- விஞ்ஞானி – கொள்ளிவாய் பிசாசு
- ரகு மயில்வாகனன் – அழகு
- அன்புச்செல்வி சுப்புராஜூ – உயிர்த்தலின் சத்தம்
- மேரி சுரேஷ் – இன்னுமொரு வாழ்வு
- இரா சீனிவாசன் – இடைவெளி
- தாணப்பன் கதிர் – தீராப்பசி
- சிறகா – உயிர்
- கே.ஸ்டாலின் – தவறவிட்ட கணம்
- வைதேகி – தெருவோர மரம்
- இந்திரநீலன் சுரேஷ் – பூஜைக்கு வராத மலர்
- சௌம்யா ரெங்கராஜன் – சொல் எனும் மந்திரம்
- செ.புனிதஜோதி – நிலையாமை
- சுந்தர்ராஜன் – பொங்கலும் பீட்சாவும்
- ஷாஅ – சமவெளியில் கெட்ட கனவு
- கீர்த்தி – விட்டுச் சென்றவை
- எஸ்.ரகோத்தமன் – கிழவியின் சிரிப்பு
- ப.மதியழகன் – கும்பமேளா
- சசிகலா விஸ்வநாதன் – நினைவுகள்
- ஆர்.வத்ஸலா – ஏமாறல்
- க.பூமணி – இரவின் நிலவு
- அதிரன் – பராக்கிரமம்
- இ.செல்வராஜ் – கரட்டாண்டி
- புஷ்பா விஸ்வநாதன் – இவளும் ஒரு பத்தினிதான்
- ஸ்ருதி ரமணி – காட்சிகள்
- கேள்விக்காரன் – எவருக்கேனும் தூவும் சாரல்
- ஆ.மோகனச்சந்திரன் – திருத்தேநீர்கண்டம்
- லாவண்யா சத்யநாதன் – என்ன செய்யலாம்?
- நெல்லை க.சோமசுந்தரி – சுட்ட நெருப்பு
- இராஜாமணி – இலக்கற்ற பயணம்
- ஹரணி – முதலிரவு
- நிஷாந்தன்- பரிமாற்றம்
- பாக்கியலட்சுமி – நிராகரிப்பு
- அரவிந்தன் ராஜாமணி – மூன்றாம் ரகம்
- மீனாட்சி சுந்தரமூர்த்தி – நிழல் என்கிற நீ
- கோவர்த்தனா – தொலைந்துப் போய்க் கொண்டிருக்கிறேன்
- க.செல்லப்பாண்டி – உயிர்த்தெழுதல்
- செந்தில் பிரசாத் – கவிதை கூத்து
- செந்தமிழ் பாரதி – தெரிந்தால் கூறுங்கள்
- எஸ்.வி. வேணுகோபாலன் – நிற்காது பெய்யும் மழை
- நா.கிருஷ்ணமூர்த்தி – காணாமல் போகிறவர்களும் மறக்கப்படுபவர்களும்

அருமையான பட்டியல்..வாழ்த்துக்கள் சிங்கர்!