
ஒரே ஒரு நாள் அல்ல
சமூகத்தை நேசிப்பவர்களுக்கு
அன்றாடம்
காதலர் தினம்
இன்றைக்குச் சிறப்பு தினம்
அன்பின் திறப்பு
அன்பின் சிலிர்ப்பு
அன்பின் இனிப்பு
அன்பின் பெருக்கு
காதலர் தினம்
பொறுப்புத் துறப்பு அல்ல, காதல்
பொறுப்பின் இணை பகிர்வு
பகிர்வின் இணை கொண்டாட்டம்
கொண்டாட்டத்தின் இணை மலர்ச்சி, காதல்
நூற்றாண்டுகளுக்கு முன்பே
ஆழ ஊன்றியிருக்கும்
சாதீய நச்சு வேரை
ஓசையின்றிக்
கல்லி எறிந்துவிடத்
துடிக்கிறது காதல்
வெட்ட வெட்டத் துளிர்க்கவும்
வெறுப்பை உறிஞ்சி
அன்பைச் சுரக்கவும்
பற்றுகிறது காதல்
எதிர்ப்பின் மரத்திலேயே
பற்றிப் படர்ந்து விடுகிறது
மறுப்பின் மடியிலேயே
மலர் மழை பெய்கிறது
கனிவின் முகவரியாகவும்
கசப்பின் முறிவு மருந்தாகவும்
காதல் மின்னுகிறது
தன்னை அழிக்கத் துணிவாருக்கும்
அருள் வார்த்தை சொல்கிறது
ஏனெனில்
காதல், சாகா வரம் பெற்றது

சிறப்பு.
மகிழ்ச்சி
பாராட்டுகள்
அருமை அருமை எஸ் வி விசார்
சிறப்பு தோழா
அருமை
வற்றாத ஜீவ நதியாய் காதல் பாய்ந்தோடும் சமூகம் அமையாமல் தடுக்க முற்படும் கயவர்கள் வெறுப்பை வளர்க்கும் பாதையை காதல் மறித்து நிற்பதால் கலவரப் படுகிறார்கள். காதல் அவர்களையும் வீழ்த்தி தன் வயப் படுத்தும்.
“எதிர்ப்பின் மரத்திலேயே
பற்றிப் படர்ந்து விடுகிறது
மறுப்பின் மடியிலேயே
மலர் மழை பெய்கிறது”
👌👏👏அருமையான வரிகள்