
நீர் விழுந்து
நிலம் நெகிழ்ந்தது போல்
பண்ணோடு இன்னிசை ஒன்றியது போல்
அரும்பாய் இருந்தது
மலராய் மலர்ந்தது போல்
காலத்தே பொழியும் சாரல் மழை போல்
எவரும் அறியாத தருணத்தில்
எவரும் எதிர்பாரா வகையில்;
நானும் எதிர்பாரா மனதில்
பூக்கிறது ; எங்கள் காதல்.
ஒரிரண்டு கண்ணீர் துளிகளில்
இரு மனங்களையும் ஒன்றாக்கி!
வினோதம் தான்!
