
வண்ணத்துப் பூச்சி
படபடத்து
பச்சிலை மேல்
வீற்றிருக்க
செல்லமாய் வருடும்
சிறகின் ஓசையில்
பச்சிலையும்
மெய் சிலிர்த்து நாணத்தில்
உடல் வளைக்க
வண்ணத்துப் பூச்சியும் ஸ்பரிசத்தில்
முகம் சிவக்க
கள்ளமில்லா காதல்
களியாட்டம் அங்கே
ஆனந்தமான அரங்கேற்றம் !
14/02/2025

காதலர் தினத்துக்கு நல்ல சமர்ப்பணம் கவிதாயினி