
தமிழில் : க.மோகனரங்கன்
தயவுசெய்து
என்னைப் பெயரிட்டு அழை
அருள் கூர்ந்து
என் குழந்தைப் பருவப் பெயரைச் சொல்லி என்னைக் கூப்பிடு
என் மீது இரக்கம் கொண்டு
மீண்டுமொரு முறை
என் சிறு வயதுப் பெயரைக் கூறி அழைத்திடு
தயவு செய்து
காற்று வீசிக்கொண்டிருக்கும்
கடந்தகால நாளொன்றிலிருந்து
என் பெயரால் அழைக்கவும்
தயவுசெய்து என்னைக் கூப்பிடு
எங்கள் வீட்டு முற்றத்தின்
மூலையிலிருக்கும் தேயிலைப் புதரில்
சில பூக்கள் இன்னும் எஞ்சியிருக்க
பனித் துகள்கள் மெல்ல நடனமிடும்
தொலைதூர நாளிலிருந்து
தயவுசெய்து என்னை அழை
தயவு செய்து என் பெயரைச் சொல்லிக் கூப்பிடு.
–
