அழகியசிங்கர்/கூட்டம்

நேற்றைய கூட்டத்திற்கு
எதிர்பார்த்த
சிலர் வரவே இல்லை

அவர்கள் கவிதைகள்
தொகுப்பில்
இருந்தது
தெரிந்தும்

எதிர்பார்த்த சிலர்
இன்னொரு கூட்டத்திற்குப்
போயிருப்பார்

அல்லது
சும்மாவே
எதற்குப் போக வேண்டுமென்று
வீம்பில்
இருந்திருப்பார்

ஆனால்
அவர்கள்
கவிதைகள் புத்தகத்தில்
இடம் பெற்றிருக்கின்றன

கவிதைகள்
அவர்கள் வரவை
ஆவலுடன்
எதிர்பார்த்து ஏமாந்து
போயிருக்கும்

One Comment on “அழகியசிங்கர்/கூட்டம்”

Comments are closed.