அழகியசிங்கர்/பருப்பு சாதம்

நான்
தினமும் பருப்பு சாதம்
இல்லாமல்
சாப்பிட மாட்டேன்
மனைவியும்
என் குறிப்புணர்ந்து
பருப்பு சாதம் வைத்துவிடுவாள்

அன்று
பருப்பு சாதம் இல்லை
சாப்பிட முடியாது
என்று எழுந்து விட்டேன்

ஒரு மூலையில்
போய்
உட்கார்ந்து கொண்டேன்

பசி வயிற்றைக்
கிள்ளியது
என்ன செய்வது
திரும்பவும் போய்
தட்டின் முன் உட்கார்ந்தேன்

இனிமேல்
பருப்பு சாதமே
கிடையாது என்றாள் மனைவி