வளவ. துரையன்
அந்த ஆடு அதோ
வாய்க்குக் கிடைத்த
புற்களை மட்டும்
அவசரம் அவசரமாக
மேய்ந்து கொண்டிருக்கிறது.
கொட்டிலுக்குச் சென்றவுடன்
மூன்று குட்டிகள் ஓடிவந்து
முட்டி முட்டிப் பால் குடிக்குமே
எங்கலைந்து பார்த்தாலும்
இன்று வயிறு நிரம்பவே இல்லை.
இப்பொழுதுதான் தன்
எதிர்காலமே கிடைத்தாக
எண்ணி அவசரமாக அது
மேய்ந்துகொண்டிருக்கிறது
கிடைப்பதைக்
கிடைத்தவுடனேயே
அனுபவிக்க வேண்டும்.
காலம் தாழ்த்தல்
கடினமான வாழ்வில்
கண்டிப்பாகத் தள்ளிவிடும்.
ஆனால்
அதுவும் மேய்ப்பரை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறது

சிந்திக்க தூண்டும் எளிய ஆனால் உள்ளார்ந்த அர்த்த பொதிவான கவிதை.
” அவசரம் அவசரமாக மேய்ந்து ” புதிய விலங்கியல் ஆய்வு! பாட்டுப் பழக்கமும் இல்லை ஆட்டுப் பழக்கமும் இல்லை