பயணம்/செ.புனிதஜோதி

அணுவில் தொடங்கி
அண்டமாய் தொடரும்
பிரபஞ்சத்தின் பயணம்…

குரங்கில் தொடங்கி
மனிதனாய் மாறிய
பயணம்…

ஓசையில் தொடங்கி
கீறலாய் மாறி
அச்சாய் தொடரும்
எழுத்தின் பயணம்…

விதையில் தொடங்கி
விருட்சமாய் மாறிய
தாவரவியலின் பயணம்..

இரையில் தொடங்கி
வலசை செல்லும்
பறப்பன பயணம்..

கருவாய்தொடங்கி
உயிராய் மாறிய
உயிரியலின் பயணம்..

குளமாய்,ஆறாய்,நதியாய்,
அருவியாய்,மழையாய்
கடலில் கலப்பது
நீரின் பயணம்..

புயலாய்,தென்றலாய்
மாறுவது காற்றின் பயணம்

கிழக்கில் தோன்றி
மேற்கில் மறையும்
பரிதியின் பயணம்

ஏதோ ஊரில் பிறந்து
ஏதோ ஊரில் வாழ்ந்து
ஏதோ ஊரில் வளர்ந்து
ஏதோ ஊரில் முடியும்
பயணம் …

காலம்
மாற்றத்தை
ஒரு புள்ளி
தொடங்கி் ஒருபுள்ளி முடியும்
சுவாரசியத்தை
எழுதிக்கொண்டேப்
பயணிக்கிறது
மாற்றம் ஒன்றே
மாறாத பயணமாய்