
ஆண்டுக்கொருநாள் வரும் திருவிழாப்போல …பெண்ணே!
உனக்கும் வருகிறது ஒருநாள்
மகளிர் தினமாய்.
அடுக்களை வியர்வையைத் துடைத்துக்கொண்டு ..
தலைவாரிப்பூச்சூடு
உனக்கு மகுடம் சூட்டுவார்கள் அதற்காக.
பொருளாதாரவிடுதலை…
கல்வியில் விடுதலை எல்லாம் உனக்கு வந்துவிட்டது…
ஆயினும் உன்சுவைக்காக
என்றும் எதுவும் முடிவுசெய்யப்படுவதில்லை.
விலங்கைஉடைத்தவர்களெல்லாம்
விடுதலை அடைந்துவிட்டார்களென்று
சொல்வதற்கில்லை.
இங்கு கடவுள் தாட்சாயினியாய் இருந்தாலும்
ஈசனின் உத்தரவுவேண்டும்.
மகளிர்தினமென்பது உனக்கான
ஒருநாள் அங்கிகாரமா….சலுகையா…
என்னசொல்லி என்ன….
உனக்கான விடுதலை
உன்னிடம்தான்….
அதுவரை இந்ததினங்களெல்லாம் வந்துபோகட்டும் …
நீ உன் ஒப்பனையைக் களைக்காமல்
பார்த்துக்கொள்.
♦
