
சன்னலோரம் கிடைக்காத
பேருந்து பயணங்களில்
எட்டி எட்டிப் பார்த்திடுவேன்
உடலுக்கு வயது கூடிவிட்டாலும்
சிறுவனாக மாறிவிட்ட மனசு…
வெளிக் காற்று மோதிக் செல்லும்
சுகத்தை அனுபவிக்கும் நேரம்
சொல்லொண்ணா இன்பம் துய்த்திடும்
இருந்தாலும் அந்த இருக்கைக்காக
ஏங்கிடும் நேரம் வலிக்கும்.

Good
Thank you friend
ஜன்னலோர பயணம்
தென்றல் தீண்டும் நேரம்
மதியும் கொஞ்சம் மயங்கும்
துய்க்க மனம் ஏங்கும்
அனைவரும் அனுபவிக்க விரும்பும்
உணர்வு. தாங்களும் விரும்பிய
உணர்வு. உணர்வுகேது வயது?
மிக்க நன்றி.
விலாவாரியாக விளக்கி, போற்றியது போற்றுத்தக்கது.
உண்மையான அனுபவம்
சுவையான மொழி
வேணு
நன்றி