சங்கரராம்/இன்ப உலகம்

இரண்டு குடும்பங்கள்

மாலை ஐந்து மணி இருக்கும்.சிவப்பிரசாத் தன் மோட்டார் சைக்கிளைப் போர்ட்டி கோவில் நிறுத்தி வைத்து,
அது சரியான நிலைமையில் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு, இஞ்சினை ஓடச் செய்வதும், நிறுத்துவதுமாக இருந்தான். அவன் வாட்டசாட்டமான இ ளைஞன்.
சுமார் இருபத்து நான்கு பிராயம் இருக்கும். மாநிறம். தேகப் பயிற்சியால் அகன்று பருத்து முன் நோக்கியவாறு இருந்தது, அவன் மார்பு.
உருண்டு திரண்டிருந்த கை கால்கள். நிமிர்ந்த தலை. பருத்த விழி களில், ஈவு இரக்கத்தோடு அஞ்சாநெஞ்சமும் உள்ளவன்
என்ற குறிகளைப் பார்ப்பவர்களுக்கு ராணுவத்தில் உயர்ந்த பதவிக்குத் தகுதி உள்ளவன் என்ற அபிப்பிரா யம் ஏற்படும்.
சைக்கிள் சீராயிருந்தது என்று தெரிந்ததும், அவன் உள்ளே சென்று அழுக்கடைந்த கதர் ஆடையை அவிழ்த்து எறிந்துவிட்டு,
வெள்ளை வெளேரென்று சலவை செய்திருந்த கதர் ஆடையை அணிந்துகொண் டான். பைஜாமாவைப் போன்ற கால்சட்டை, முழுக் கையுடன்
முழங்கால் வரையிலும் நீண்டிருந்த சட்டை, காந்திக் குல்லாய் – இவற்றுடன் நிலைக்கண்ணாடியின் முன் நின்று ஒரு நிமிஷம் பார்த்துக்கொண்டான். பிறகு. ஒரு காங்கிரஸ்
கூட்டத்துக்குப் போவதற்காக வெளியே வந்தான். இப்பொழுது, மோட்டார் வண்டி. வரும் ஓசை கேட்கவே, அவன் தலை யெடுத்துப் பார்த்தான்
உதவிப் போலீஸ் கமிஷனர் ராமகிருஷ்ணனின் கார் வீட்டை நோக்கி வந்துகொண் டிருந்தது. அவரே ஒட்டிக்கொண்டு வந்தார். உடனே, சிவப்பிரசாத். மோட்டார் சைக்கிளை அப்புறமாக விலக்கி வைத்தான்.
ராமகிருஷ்ணனின் குடும்பம் முழுவதும் வண்டியில் இருப் பதைக் கண்டான்.
“வாருங்கள் மாமா, வாருங்கள் மாமி” என்று அவர்களை அவன் வரவேற்றான்.
”இன்றைக்கு மழைதான் வரப்’ போகிறது” என்றான் பிரசாத், ராமகிருஷ்ணனுடைய மனைவி கோமதியம்மாளைப் பார்த்து.
”ஏன்?” என்றாள் கோமதியம்மாள்,

  • நீங்கள்கூட வந்து விட்டீர்களே!”
    உங்கள் மாமா வீட்டில் ஒரு நிமிஷம் தங்குவ தில்லை. வீட்டில் எல்லாவற்றையும்நானே கவனிக்க வேண்டும். எப்படி வீட்டை விட்டு நகர முடியும்?
    சொல்லு.’
    “நீங்கள் சுந்தரிக்கு வேலை கொடுக்கவேண்டும். செல்லக் குழந்தையென்று பார்க்கிறீர்கள்” என்றான் சிவப்பிரசாத், இப்போது வண்டியிலிருந்து இறங்கிய சுந்தரியைப் பார்த்து.
    “ஆமாம், யார் செல்லக் குழந்தை என்று இப்பொழுதே தெரிகிறதே. நாலுமணி ஆனதும் மோட்டார் சைக்கிளைப் போட்டுக்கொண்டு சுற்ற ஆரம்பிக்கிறீர்கள்” என்றாள் சுந்தரி,
    ·”சுற்றுகிறேனா, வேலை செய்கிறேனா? வந்து பாரேன். எங்கள் சங்கதி இப்பொழுதா தெரியும்?- மாமா, மாமி, ஹாலிலே
    உள்ளே வந்து உட்காருங்கள். அப்பாவும் அம்மாவும் தோட்டத்துப் பக்கம் போயிருக்கிறார்கள். அழைத்துக்கொண்டு வருகிறேன்” என்றான்
    சிவப்பிரசாத்.
    “நான் வரக்கூடாதா, அத்தான்?” என்றாள் சுந்தரி.
    ” வர வேண்டாம் என்று சொல்லுவேனா?-அடே குமார், கிருஷ்ணா, இப்படி வாருங்கள்” என்று அவன் சுந்தரியின் தம்பிகள் இருவரையும் அழைத்தான்.
    குமாருக்குச் சுமார் பதின்மூன்று வயசு இருக்கும்; கிருஷ்ணனுக்குப் பதினைந்து. சிவப்பிரசாத் அவர்களிடம் இரகசியமாகப் பேசினான். சுந்தரிக்குச் சிரிப்பு வந்தது.
    சிறுவர்கள் இருவரும் காற்றோட்டம் இல்லாமல், ஜன்னல்கள் எல்லாம் மூடியிருந்த ஓர் அறையில் புகுந்தனர். சிவப்பிரசாதும் சுந்தரியும் ஜோடியாகக் கொல்லைப்புறம் சென் றார்கள்.
    அவர்கள் அப்படிப் போவதைக் கண்டு, சுந்தரியின் தாய் கோமதியம்மாள் மனம் குளிர்ந்தாள்.
    “நேற் றைக்கு இன்றைக்குப் பழகியவர்களா? அறியாத வயசிலேயிருந்து விளையாடித் திரிந்தவர்களாயிற்றே!” என்றாள்.
    ஆண்டவன் அருளாலே அமைந்து போனால் நன்றாக இருக்கும்” என்றார் ராமகிருஷ்ணன்.
    “எப்படி அமையாமல் போகும்? எல்லாம் நம் கையிலே இருக்கிறது” என்றாள் கோமதியம்மாள்.
    ராமகிருஷ்ணனைப் பார்த்தால் சாதாரணமாக யாவ ரும் உயர்தரப் பள்ளியில் வேலை செய்யும் உபாத்தியாயராக நினைப்பார்கள். சாதாரணமான உருவம்; அவர்
    உரக்கவோ துடுக்காகவோ பேசமாட்டார். இட்ட வேலையைப் பொறுப்போடு செய்வார். நேர்மை தவறி நடக்கமாட்டார். உழைப்பில் வஞ்சனையே
    இராது. அதனாலே, சப் இன்ஸ்பெக்டர் வேலையிலிருந்து, சீக்கிரத்தில் உதவிப் போலீஸ் கமிஷனர் பதவிக்கு வந்தவர்.
    கோமதியம்மாளோ நேர் விரோதம். அவளுடைய அதிகார தோரணை தலைதூக்கி நின்றது. கர்வத்துக்குக் குறைவில்லை. வயசு நாற்பது ஆகியும், இருபத்தைந்து வயசு யுவதிபோல் தோற்றம் அளித்தாள்.
    அறியாதவர்கள், அவளைச் சுந்தரியின் தமக்கை என்று நினைப்பார்கள்.
    அவளுக்கு, தானே உதவிப் போலீஸ் கமிஷனர் என்று ஒரு மனப்பான்மை; உண்மையில் ராமகிருஷ்ணனைவிட அவளே போலீஸ் உத்தியோகத்துக்கு
    ஏற்றவள் என்று சொல்லவேண்டும்.
    சில நிமிஷங்களுக்குப் பிறகு சிவப்பிரசாத்தும் சுந்தரியும் கொல்லைப்புறத்திலிருந்து, சிரித்தவாறே
    ஜோடியாகத் திரும்பினார்கள். சுந்தரியின் தலை சிவப்பிரசாத்தின் மோவாய்க்கட்டைக்குத்தான் எட்டியது.
    அவள் தாயைப்போல் நல்ல சிவப்பு. ஒடிந்து விடுவது போல் இருந்த மெல்லிய உடலில், சக்தியும் சுறுசுறுப்பும் தாண்டவமாடின.
    முகத்தில் சதைப் பற்று அதிகம் இல்லாததால், அவளுடைய கறுத்த விழிகள், பார்ப்பதற்குப் பெரியவையாகப் புலப்பட்டன.
    ஆனால், அவை களில் வீசிய நம்பிக்கை அவளுக்கு அலாதியான கவர்ச்சியைக் கொடுத்தது.
    கோமதியம்மாளுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
    “என்ன, இரண்டு பேர் மட்டும் திரும்பி வருகிறீர் களே!” என்றாள்.
    ‘அப்பாவும் அம்மாவும் இதோ வந்துவிடுவார்கள். அப்பா ‘கம்மோடு’ க்குப் போயிருக்கிறார். போன வருஷம் ஒரு தடவை மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். தெரி யும் அல்லவா?”
    “எனக்குத் தெரியாதே! ரத்த அழுத்தம் இருக்கிறதா?” என்று ராமகிருஷ்ணன் உருக்கத்தோடு கேட்டார்.
    “இப்போது ஒன்றும் இல்லை, மாமா. ஆனால் அம்மா,
    அதிலேயிருந்து அவரைத் தனியாய்ப் போக விட மாட்டார்கள். அவர் வருகிறவரையிலு ம் வெளியே காத்துக்கொண் டிருப்பார்கள்,”
    “மாமாவுக்கு மாமி துணை; மாமிக்கு நாய் துணை மாமியை விட்டு அது நகராது. இதோ ஓடிவருகிறதே. மாமி பின்னாலே வருகிறார்கள். அதுதான் இது முன்னால் வருகிறது” என்று சுந்தரி எல்லாவற்றையும் அறிந்தவள் போல் சொன்னாள்.
    சிவகாமியம்மாள் சிவப்பிரசாத்தின் தாய் என்பதை யாரும் ஊகித்துக்கொள்ளலாம். அதே நிறம்; பெரும் பாடியான சரீரம்; விசாலமான நெற்றி; அதற்கு ஏற்ற கண்களும் மூக்கும்; தினமும் மஞ்சளை அரைத்துப் பூசிக் குளிப்பதனால், முகத்துக்கு ஒரு விதமான மஞ்சள் நிறம் ஏற்பட்டிருந்தது. நெற்றியில் காலணா அளவுக்குக் குங்கு மப் பொட்டு. கழுத்தில் விதவிதமான தங்கச் சங்கிலிகள் இருந்தன. அவளுக்கு விருப்பம் இல்லாவிடினும், தன் கணவர் கைலாசத்தின் விருப்பத்துக்காக அவள் அவற்றைச் சுமக்க வேண்டியீருந்தது. கைகளிலும் அடுக்கடுக்காசுத் தங்க வளையல்கள் நிரம்பியிருந்தன, காதுக்கேற்ற பெரிய வைரத்தோடும் மூக்குத்தியும் ஒளி வீசின, அவளிடத்தில் லட்சுமி கடாட்சம் குடி கொண்டிருந்தது. சுமார் ஐம்பது வயசு இருக்கும்.
    ”வாருங்கள். வாருங்கள்” என்று மலர்ந்த முகத் தோடு, தலையை முன்னும் பின்னுமாக ஆட்டிக்கொண்டு, சிவகாமியம்மாளும் அவர்களை வரவேற்றள்.
    ”வந்து வெகு நேரம் ஆயிற்றே?”
    ”இல்லை. இல்லை. பத்து நிமிஷந்தான் இருக்கும்’ என்றார் ராமகிருஷ்ணன். இதற்குள் கைலாச மும் வந்துகொண்டிருந்தார்.
    கைலாசத்துக்கு ஐம்பத்தாறு வயசு ஆகிவிட்டது. ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் தோற்றத்தில் எவ்வளவு வித்தியாசம்! கைலாசம் சிவகாமியை விடச் சிறிது குள்ளம். கறுத்த நிறம். ஒற்றை நாடி உடன்; சிறு வயசில் அவருக்குக் ‘கிட்டிப் பத்து’ என்று ஒரு பெயர் உண்டு. அவருக்கு மெதுவாகவே நடக்கத் தெரியாது.
    இளமையில் ஆரோக்கியத்தைக் கவனியாமல் ஆடி ஓடித் திரிந்ததனாலோ, உடலுக்கு வலுவைக்
    கொடுக்கக் கூடிய உணவுவசதிகள் இல்லாததனாலோ, அவருடைய நடையிலும் பேச்சிலும் ஒரு வித மந்தம் ஏற்பட்டுவிட்டது.
    கைலாசமும் ராமகிருஷ்ணனையும் அவருடைய மனைவியையும் அன்புடன் வரவேற்றார். எல்லோரும் உட்கார்ந்துகொண்டு பேசத் தொடங்கினர். சிவப்பிரசாத்
    சில நிமிஷங்களுக்குப் பிறகு எழுந்து, தான் காங்கிரஸ் கூட்டத்துக்குப் போய் வருவதாகச் சொன்னான்.
    “நானும் வரலாமா?” என்றாள் சுந்தரி.
    சிவப்பிரசாத் அவளை ஏற இறங்கப் பார்த்தான். “கதர் உடுத்துக்கொண்டால், அழைத்துக்கொண்டு போகிறேன்” என்றான்.
    “உங்கள் மாமா வேலைக்கு வேறு வினை வேண் டாம்” என்றாள் கோமதியம்மாள்.
    “மாமிக்கு எவ்வளவு பயமோ! அப்போது, மாமா இங்கே வருவதுகூட ஆபத்தென்று சொல்லுங்கள்”என்று சிவப்பிரசாத் சிரித்தான்.
    “அப்படி ஒன்றும் இல்லை. என் ஆதரவில் இருக்கும் வரையில், என் குழந்தைகளின் நடத்தைக்கு நான் பொறுப்பாளி என்று அரசாங்கம் சொல்லலாம். என்னை விட்டு விலகிப் போய்விட்டால்,
    நான் என்ன செய்ய முடியும்? வயசு வந்தவர்களை நான் கட்டுப்பாடு செய்ய முடியுமா?” என்றார் ராமகிருஷ்ணன் குறுக்கிட்டு.
    அது எனக்கும் தெரியும். அப்பொழுது, பிரசாதோடு சுந்தரியும் சத்தியாக்கிரகம் செய்யலாம்” என்றாள் கோமதியம்மாள் அசட்டுச் சிரிப்புடன்.
    ‘அதுவும் தவிர, அரசாங்கத்து நோக்கமெல்லாம் இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது அண்ணா” என்றார் ராமகிருஷ்ணன் கைலாசத்தைப் பார்த்து.
    ‘அதிகாரத்தாலேயே அரசாங்கத்தை நடத்த முடியாதென்று தெரிந்துகொண்டார்கள். அதனால் விட்டுப் பிடிக்கப் பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தில் நாலு கட்சிகள் இருக்கலாமென்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். உங்களிடமிருந்து பத்தாயிரம் யுத்த நிதிக்கு நான் வாங்கிக் கொடுத்ததும் அவர்களுக்குத் தெரியும்; பிரசாதும் அவன் காங்கிரஸ் கட்சியும் செய்கிற அட்டகாசமும் அவர்களுக்குத் தெரியும்” என்றார் ராமகிருஷ்ணன் புன்முறுவலுடன்.
    “அட்டகாசமென்று சொல்லலாமா, மாமா? நீதிக் கும் நேர்மைக்கும் தேசத்துக்கும் உலகம் முழுவதும் இன்புற்று வாழ வேண்டுமென்பதற்கும் நாங்கள் உழைக்க வேண்டும் என்பது மகாத்மா காந்தியவர்களின் போதனை. அதைச் சாதிக்க, அப்பெரியார் இரண்டு கருவிகளை அளித்திருக்கிறார்கள். அவைதாம் அன்பும் அஹிம்சையும். அப்படி ருக்க, நீங்கள் அட்டகாசமென்று சொல்லக் கூடாது. ‘வாபஸ்’ வாங்கிக் கொள்ள வேண்டும்” என்று சிவப்பிரசாத் வேடிக்கையாகச் சொன்னான்.
    ‘அப்படியே வாங்கிக்கொள்கிறேன், அப்பா” என்றார் ராமகிருஷ்ணன் சிரித்தவாறு;
    ‘நாளைக்குக் காங்கிரஸ் ஆட்சியின் கீழ்த்தானே நாங்கள் வேலை செய்ய வேண்டும்?”
    ‘இப்பொழுதே மாமாவுக்குப் பயம் பிடித்துவிட் என்று சிவப்பிரசாத் கைதட்டினான்.
    “நீ இருக்கிறபோது எனக்கு ஏன் பயம், ராஜா?” என்றார் ராமகிருஷ்ணன் மிக்க அன்புடன்.
    கைலாசம், விஷயத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளாதவர் போல், ராமகிருஷ்ணனையும் சிவப்பிரசாதையும் மாறி மாறிப் பார்த்தார்.
    பிறகு சிவப்பிரசாத் , விடை பெற்றுக்கொண்டு காங்கிரஸ் கூட்டத்துக்குப்போய்விட்டான்.
    சுந்தரி தெருவாசல் வரையிலும் சென்று அவனை அனுப்பி வைத்தாள்.
    அப்புறம், தோட்டத்தில் குமாரும், மாம்பழங்களைத் தின்றுகொண்டு கூச்சல் போடுவது கேட்கவே, அவள் தோட்டத்தை நோக்கிச் சென்றாள். சிவகாமியம்மாளும் கோமதியம்மாளும் ஒரு பெரிய சோபாவின்மீது சாய்ந்துகொண்டு,
    தங்களுடைய உற்றார் உறவினர்களைப்பற்றிப் பேச ஆரம்பித் தார்கள். ராமகிருஷ்ணன் கைலாசத்துக்கு எட்டின உறவாய் இருந்த போதிலும், கோமதியம்மாள் நெருங் கிய சுற்றம்போல் பழகினாள்.
    கைலாசமும் ராமகிருஷ்ணனும் சிறிது எட்டிப் போய், மற்றொரு சோபாவில் உட்கார்ந்துகொண்டு’ மெதுவாகப் பேசத் தொடங்கினர்.
    சிவப்பிரசாதைப் பந்துக்களிலிருந்து சிநேகிதர்கள் வரையில் அநேகமாய் எல்லோரும், ‘பிரசாத்’ என்றே அழைப்பது வழக்கம். காங்கிரஸ் தொண்டர்களுக்கு. அவன், ‘கேப்டன்’. அவர்கள் அவனைக் கேப்டன்’ என்றே அழைப்பார்கள். தேநீர் விருந்துகளில் கலந்து”
    கொள்ளும்பொழுது, அவனுடைய நண்பர்கள், ‘கேப்டனுக்குப் பிரசாதம்’ என்றும், ‘பிரசாதத்துக்குக் கேப் டன்’ என்றும் கூத்தடிப்பார்கள். சிவப்பிரசாதும் அவரவர்களுக்குத் தக்கவாறு காலை வாரி விடுவான். இப்பொழுது, கைலாசமும் ராமகிருஷ்ணனும் பிரசாதைப் பற்றித்தான் ரகசியமாகப் பேச ஆரம்பித்தனர். “அவன்” சங்கதியே எனக்கு ஒன்றும் தெரியவில்லை” என்று கைலா சம் முறையிட்டார்.
    ‘இந்தக் காலத்துப் பிள்ளைகள் எல்லாம் ஒரு மாதிரிதான். நாமும் காலத்துக்குத் தக்கவாறு போகவேண்டும். இல்லாவிட்டால், நமக்குத்தான் மரியாதைக் குறைவு.
    எங்கள் குமார் எவ்வளவு இயிசை செய்கிறான் தெரி யுமோ?” என்றார் ராமகிருஷ்ணன்.
    “என்ன காலமோ, என்ன பிள்ளைகளோ, போங் கள். பொறுப்பு வேண்டாமா? பணத்தை வாரி இறைத்து விட்டால் அப்புறம் அது திரும்பி வருகிற வழி ஏது? ஒன்றொன்றாக நூறோ, ஒருமிக்க நூறோ
    என்பார்கள். பாடு பட்டுச் சம்பாதித்தவர்களுக்கு அல்லவா அந்த அருமை தெரியும்?”
    ‘ஆமாம்” என்று ராமகிருஷ்ணன் ஆமோதித்தார். இருந்தாற்போல் இருந்து பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விடுகிறான். அந்த இழவு ஏதாவது விளங்குகிறதா? இப்போது பாருங்கள். என்ன என்னவோ சொல்லி உங்களையே வாயைக் கட்டப் பார்க்கிறான். ஆமாம், காங்கி ரஸ் ஆட்சி என்று சொன்னீர்களே; அது வருமோ?”
    “இருக்கிற நிலைமையிலே அது வந்துதான் தீரும். இதையெல்லாம் நான் சொல்லக் கூடாது. இருந்தாலும் உங்களுக்குத் தெரிய வேண்டுமே. நீங்கள் யாரிடமாவது சொல்லப் போகிறீர்கள்.”
    ‘ஐயோ, இதெல்லாம் நமக்குள்ளேதானே?”என்றார் கைலாசம், குரலைப் பின்னும் தாழ்த்தி, இந்த இரண்டாவது உலக யுத்தத்தாலே, இங்கிலீஷ்க்காரர்களுக்கு மிகவும் கஷ்டம் ஏற்பட்டுவிட்டது.
    அவர்களுடைய விஷயங்களையே அவர்களாலே சமாளிக்க முடியவில்லை. அப்படி இருக்கிறபோது, இந்தத் தேசத் துச் சண்டையும் சச்சரவும் அவர்களுக்குப் பெரிய தலைவலி, முந்தி நல்ல வரும்படி வந்துகொண் டிருந்தது.
    அதையும் காங்கிரஸ்காரர்கள் ஒரு விதமாக ஒழித்து விட்டார்கள். வருமானம் இல்லாமல் இந்தப் பிடுங்கல் வந்துவிட்டது. ஆகையினாலே எதற்கு என்கிற ரூபாய்க்குப் பதினைந்து அணா வரையிலும் அதிகாரத்தைக் காங்கிரஸ்காரர்களுக்கு ஒப்பித்துவிடுவது போலப் பேச்சு நடக்கிறது. எல்லாம் நாலைந்து மாதத்துக்குள்ளே தெரிந்து போகும்” என்றார் ராமகிருஷ்ணன்.
  • ”அப்படியா? காங்கிரஸ்காரர்கள் வெள்ளைக்காரனைப்போல் அரசாங்கத்தை நடத்துவார்களா? ஓர் ஊரிலே நூறு குடும்பம் இருந்தால் நூறு கட்சி உண்டாகுமே. அட இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டு எங்கே நாட்டைக் கெடுத்துவிடுகிறார்களோ!”
  • ‘அவ்வளவு தூரத்துக்கு வராது. காங்கிரஸிலே கடவுளுக்குச் சமானமானவர்கள் இருக்கிறார்கள். உண்மையில், பொதுமக்களுக்குத் துரோகம் செய்யமாட்டார்கள். மகாத்மா காந்தியின்மேல் இங்கிலீஷ்க்காரர்களு க் கும் எவ்வளவோ மதிப்பு இருக்கிறது. ஆனால், இருக்கிற சொத்தைக் கொடுக்க மனம் வருமா? ஒன்று மாத்திரம் நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். இங்கிலீஷ்க்காரர்களின் நேர்மையும் பெருந்தன்மையும் நமக்கு வர வெகு காலமாகும். இதைப் பிரசாத் கேட்டால் சண் டைக்கு வந்துவிடுவான்” என்றார் ராமகிருஷ்ணன், புன்முறுவலுடன்.
  • சண்டைக்கு வந்து என்ன செய்வது? உள்ளதைச் ‘சொன்னால் உடம்பெரிச்சல்தான். ஆனால், பிரசாத் “எதைக் கண்டான்? குழந்தை! இன்றைக்கும் அவனுக்கு ‘வெளுத்ததெல்லாம் பால்தான். ரூபாய்க்குப் பதினைந்து அணா சுயராஜ்யம் வந்ததென்று வைத்துக்கொள்ளலாம். அதிலே, பிரசாதுக்கு என்ன கிடைக்கும்?” என்று கைல சம் ஆசையோடு கேட்டார்.
  • ”எல்லாம் கிடைக்கும். அவன் வயசுக்கேற்ற பதவி பெறுவான். டாக்டர் கோவிந்தன் கட்டாயம் ஒரு மந்திரி ஆகிவிடுவார். முதல் மந்திரியாகக்கூடத் தேர்ந்தெடுக்கப் பெறலாம். டாக்டருக்குப் பிரசாத் வலக்கை ஆயிற்றே. அவன் மேலே அவருக்கு உயிர். பிரசாத் வைத்தது சட்டமாகிவிடும்.”

“என்னவோ, போங்கள்; எல்லாம் வேடிக்கையாய் இருக்கிறது. இதனாலே பிரசாதுக்குப் பணம் வருமா?”
ராமகிருஷ்ணனுக்குச் சிரிப்பு வந்தது. “பெரிய பதவி, பணத்துக்கு மேல் அல்லவா? ஒரு காரியதரிசி என் றால் நல்ல சம்பளமும் கிடைக்கும். அதனால் அடையும் செல்வாக்குக்கு மதிப்பே போட முடியாதே!”
‘பணம் இல்லாமல் என்ன மதிப்பு வேண்டி யிருக் கிறது? எனக்குத் தெரிந்தமட்டில் பணம் பேசுகிறது போலே எதுவும் பேசாது” என்று கைலாசம் அநுபவ ஞானத்தோடு அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
‘உண்மைதான். ஆனால், அதிகாரம் பணத்தைப் பேசச் செய்யும்; விளையச் செய்யும்; கக்கும்படிகூடச் செய்யும்; போங்களேன்.”
“என்ன நீங்கள் சொல்கிறது? அதிகாரம் இருந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்துவிட
காங்கிரஸ்காரர்கள்
‘அதிகாரத்தை வைத்துக்கொண்டு, விருப்பப்படி செய்த அரசாங்கங்களும் உலகத்திலே உண்டு. ஆனால், அப்படிப்பட்டவர்கள் அல்ல. வீணாய்ச் சொல்லக்கூடாது. நெல் என்றால் பதரும் இருக் கத்தான் இருக்கும். மொத்தத்திலே அவர்கள் நல்ல கொள்கை உள்ளவர்கள். அதை நான் சொல்லக் கூடாது. நான் போலீஸ் அதிகாரி அல்லவா?” என்று குரலைத் தாழ்த்தினார்.
‘மெய்தான், மெய்தான். நீங்கள் சொல்கிறதைப் பார்த்தால், பாவம்! பிரிட்டிஷ் ராஜாங்கத்துக்குச் சட் டுப் புட்டென்று முடிவு வந்துவிடும்போல் அல்லவா இருக் கிறது?’ ‘
‘இந்த அபிப்பிராயத்தை வெளிப்படச் சொல்லா தீர்கள்” என்று ராமகிருஷ்ணன் எச்சரித்தார்.
இல்லை, இல்லை.’
‘நான் சொல்ல வந்தது என்னவென்றால், சமூகத்தில் மதிப்பு, கௌரவம் அல்லவா? என்றெல்லாம் இருக்கின்றன
இவை பணத்தால் மட்டும் வருபவை அல்ல. இந்த மதிப்புக்காகப் பணம் படைத்தவர் எத்தனை பேர் அழுகிறார்கள் தெரியுமா?”
‘ஆமாம், ஆமாம்” என்றார் கைலாசம் உடனே, இந்த ஏக்கம் தமக்கும் உண்டு என்பதுபோல்.
இப்போது என்னையும் என்னைப்போல் இருக்கிற உத்தியோகஸ்தர்களையுமே பாருங்கள். எங்களைக் கண்டால் சலாம் போடுகிறவர்களுக்குக் கணக்கே இராது. காங்கிரஸ் ஆட்சி வந்ததும், நாங்கள் தடியாலே அடித்தவர்களுக்கெல்லாம் கும்பிடு போட்டாகவேண்டும். அதிலே காரம் வைத்திருக்கிறவர்களும் சில பேர் இருப் பார்கள். அவர்கள் எங்களை என்ன பாடு படுத்தப்போகிறார்களோ! ஆனால் டாக்டர் கோவிந்தன் முதலானவர்கள் தங்கள் சிப்பந்திகளை நேர்மை தவறி நடக்க விடமாட் டார்கள். பத்து ரூபாய் சம்பளமானாலும் ஆயிரம் ரூபாய் சம்பளமானாலும் நாங்கள் ஊழியர்கள்தாமே? வஞ்சனை இல்லாமல் இட்ட வேலையைச் செய்வது எங்கள் கடமை அல்லவா?”
ஆமாம்’” ஆமாம், என்று கைலாசம் தாளம போட்டார்.
இன்றைக்குப் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உழைக் கிறோம். நாளைக்குக் காங்கிரஸ் அரசாட்சிக்கு உழைக்கப் போகிறோம்; அவ்வளவுதானே?”
எல்லாவற்றிற்கும் கைலாசம், “ஆமாம்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். அவருக்கு ராமகிருஷ்ணனிடம் அதிகக் கௌரவம். அவருடைய உறவினர்களில் படித்தவர்கள் மிகக் குறைவு. அதிலும் நல்ல உத்தியோக பதவியில் இருந்தவர்கள் இரண்டொருவர்கூட இல்லை. அதனாலே, ராமகிருஷ்ணனோடு நெருங்கிப் பழகுவதில் அவருக்குச் சந்தோஷம். பிரசாத் அடிக்கும் கூத்துக்கெல்லாம் அவர் இல்லாவிட்டால் தம்மால் சமாளிக்க முடியா தென்ற ஒரு நம்பிக்கை. இப்பொழுது பிரிட்டிஷ் அரசாங் கத்துக்கும் அவர்மீது சந்தேகம் இல்லை. பிரசாதின் மூலம், காங்கிரஸ் கட்சியுடனும் பகைமை இல்லை. அவருக்கு எந்தக் கட்சியோடும் மனஸ்தாபம் வைத்துக் கொள்ள விருப்பம் இல்லை. ‘எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?’ என்ற பயம் அவருக்கு உண்டு.
கைலாசத்துக்கு ராமகிருஷ்ணனுடைய குடும்பத்தில் சம்பந்தம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டு. அந்த எண்ணம் ராமகிருஷ்ணனுக்கும் இல்லாமற் போகவில்லை. ஆனால், வெளிப்படையாக இருதரத்தாரும் இதுவரையில் இதைப்பற்றிப் பேசவில்லை. இதன் மத்தியில், சிறு வயசிலிருந்து பழகிவந்த சுந்தரியும் பிரசாதும் வெகு நேசத்தோடு நடந்துகொள்வது அவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது. ஏதேதோ விஷயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, மறுபடியும் காபி வழங்கப்பட்டது. காபியைப் பருகிவிட்டு, கோமதியம்மாள் சிவகாமியம்மாளுடன் அவர் இடத்துக்கு வந்தாள். என்ன வேண்டும்?” என்றார் ராமகிருஷ்ணன்.
ஒன்றும் வேண்டாம். நாங்கள் மாடிக்குப் போகிறோம். அக்காள் புதிதாய்ச் சாமான்களெல்லாம் வாங்கியிருக்கிறார்களாம்; பார்க்கச் சொல்கிறார்கள்.’ சரி, போ. சுந்தரி எங்கே?”
தன் தம்பிகளுடன் தோட்டத்தில் விளையாடிக் (கொண்டிருக்கிறாள். இந்த விளையாட்டுப் புத்தி எப்பொழுதுதான் அவளுக்குப் போகுமோ?”
‘அவளுக்கு என்ன வயசு ஆகிவிட்டது?” என்றார் கைலாசம்.
“சொல்கிறதைப் பாருங்கள். எனக்குக் கல்யாணம் ஆனபோது, வயசு பன்னிரண்டு. அப்போதிலிருந்து கூண்டிலே பிடித்துப் போட்டாற்போலேதான்’ என்றாள் சிவகாமியம்மாள், கோமதியைப் பார்த்து.
‘”எனக்கு மட்டும் என்ன வயசென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பதினாலு; இரண்டு வயசுகூட. அப் பொழுது அவர்கள் அம்மா இருந்தார்கள். பலமாய் மூச்சு விடக் கூடாது; தலையை அப்படி நீட்டக்கூடாது;: இப்படி நீட்டக்கூடாது” என்றாள் கோமதி.
“அவர் சொல்வதுபோல, காலத்துக்குத் தக்கபடி. நாம் எல்லாம் நடந்துதானே ஆகவேண்டும்?’ என்றார் கைலாசம்.
“ஊம், காலம்!” என்றாள் சிவகாமியம்மாள். ‘அப்படியானால் நீ பன்னிரண்டு வயசுப் பெண்ணாக ஆகிவிடேன்.”
‘கேட்டீர்களா, அம்மா. பெரியவருக்குப் பேசத் தெரியாது என்று சொன்னீர்களே!” என்று சிவகாமியம்மாள் பெருமிதத்துடன் கோமதியிடம் சொல்லிக் கொண்டு மாடிப்படி ஏறினாள்.
மேடையில் ஒவ்வோர் இடமாகக் கோமதி, சிவகாமியம்மாளுடன் பார்வையிட்டுக்கொண்டு போனாள். கீழ்க் கட்டைவிட அது விசாலமானதுபோலத் தோற்றம் அளித்தது. சிவகாமியம்மாள் சேகரித்து வைத்திருந்த சாமான்களைக் கண்டு, கோமதி திகைத்துப்போனாள். பொறாமை அவளோடுகூடப் பிறந்த பேய். மானிட வர்க்கமே ஓர் அளவுக்கு அதன் ஆட்சிக்கு உட்பட்டது என்ற போதிலும், அவளிடத்தில் அது தலை விரித் தாடியது. இவ்வித த வாழ்க்கை தனக்குக் கனவிலும் கிட்டாது என்று அவளுக்குத் தெரிந்தது. உட்காருவதற் கும் ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் உறங்குவதற்கும் எவ்வளவு விதமான வசதிகள்! மின்சார விளக்குகளின் அமைப்பும் ஜோடனையும் என்ன! எவ்வளவு தினுசு ரத்தினக் கம்பளங்கள், மான் தோல், புலித் தோலின் வகைகள் என்ன! இவைகளையெல்லாம் காணக் காண அவளுக்குத் தன்னை அறியாமல் பெருமூச்சு வந்தது. ஆனால், சாமர்த்தியக்காரியானதால், அவள் சிரித்த முகத்தோடு தன் உள்ளுணர்ச்சியை மறைக்க முயன்றாள். அவர்களுடைய திண்டுகளுக்கும் மெத்தைகளுக்கும் அவ்வளவு மிருதுவான பஞ்சை எங்கிருந்துதான் தருவித்தார்களோ என்று வியந்தாள். அங்கிருந்த தந்தப் பொம்மைகளின் விலைகூடத் தன் வீட்டிலிருந்த சாமான்கள் பொறா என்ற, எண்ணம் வந்தது. ஏதோ அவளுடைய வாய் பேசியதே, ஒழிய, அவளுடைய மனம் எங்கெங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது. படிப்பற்றவருக்கா இவ்வளவு செல் வாக்கு! எப்படி அது வந்ததென்று அவளுக்குத் தெரிய· வில்லை. கைலாசத்துக்குப் பெற்றோர்கள் காலணா வைக்க வில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். படிப்புக்கும். பணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்ந்தாள். வ்வாறு அவள் மனம் சுழன்றுகொண் டிருந்தபோது, ‘முன் பக்கம் வருகிறீர்களா?” என்று சிவகாமியம்மாள் கேட்டது, அவளைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதுபோல் இருந்தது. ‘வருகிறேன், வருகிறேன்” என்று சொல்லிக்: கொண்டே அவள் சிவகாமியம்மாளைப் பின்பற்றினாள்.
“கிழக்குப் பார்த்த வீடு ஆயிற்றா? இந்தக் கோடி.யிலே ஓர் அறை, அந்தக் கோடியிலே ஓர் அறை. இரண் டுக்கும் தெற்கேயிருந்து நல்ல காற்று வரும். கல்யாண மானதும் ஆளுக்கு ஒன்று கொடுத்துவிடப் போகிறேன். எனக்கு இருக்கிறது இரண்டே பிள்ளைகள்தானே?” என்று குறைப்பட்டதுபோல் சொல்லவே, சிவகாமி அம்மாள் “அவர்கள் இரண்டு பேரும் பூரண ஆயுசோடு, சுகமாய் வாழ்ந்திருக்கட்டும்; அதுவே போதும்” என்றாள் கோமதி.
“போதும், போதும், பெண் குழந்தை என்றால். எனக்கும் ஆசை, அவருக்கும் ஆசை எங்கள் குடும்பத்திலேயே ஆனால் பெண்பிறப்புக் கிடையாது.
அது என்ன பாவமோ!” என்று அவள் சொல்லிக்கொண்டிருந்த பொழுதே கார் ஓசையைக் கேட்டு, பையன் வருகிறானா என்ன?” என்று எட்டிப் பார்த்தாள். “‘என்ன, தம்பி, அதற்குள்ளாகவே வந்துவிட்டாய்?” என்று வண்டியிலிருந்து இறங்கின இளைய மகன் ஆனந்தனைக் கண்டு விசாரித்தாள்.
“அப்பாவிடம் கொஞ்சம் வேலை இருக்கிறது அம்மா,ஒ, வந்தீர்களா?’ என்று வரவேற்பதுபோல், அவன் கோமதிக்குச் சந்தோஷத்தோடு வணக்கம் தெரிவித்தான். பிறகு, காகிதக் கட்டுகளை வண்டியிலிருந்து எடுத்துக்கொண்டு அவன் உள்ளே சென்றான்.
தாயின் நிறம் ஒன்றைத் தவிர, மற்றெல்லா விஷயங்களிலும் ஆனந்தன் தகப்பனாரை ஒத்திருந்தான். அவனைப் பார்த்தவர்கள், சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன் கைலாசம் எப்படி இருந்தார் என்பதைச் சுலபமாக ஊகித்துக்கொள்வார்கள். அதே குள்ளம்; ஆனால் உடம் பில் ஒருவிதத் துடிப்பு; எப்பொழுதும் கருமத்திலேயே கண்; கண்டவர்களுக்கு ஒரு நிமிஷங்கூட வீணாக்க மாட் டான் என்ற அபிப்பிராயம் ஏற்படும். அவன் விரைந்து தகப்பனாரிடம் சென்றான்; ராமகிருஷ்ணன் அங்கே இருக் கவே, அவரையும் அன்போடு வணங்கினான்.
“என்ன சங்கதி?’ என்று கைலாசம் சிறிது கவலை யோடு கேட்டார்.
‘ஒன்றும் இல்லை’ என்று இழுத்தவாறு ஒரு காகிதக்கட்டை அவிழ்த்தான்.
“ஆலையைப்பற்றிய ‘ப்ரைவேட்’ சமாசாரமாக இருந்தால், நான் போய் வருகிறேனே” என்று ராமகிருஷ்ணன் எழுந்தார்.
அடடா, நீங்கள் உட்காருங்கள் மாமா. அப்பா வேறு, நீங்கள் வேறா? நமக்குள்ளே பிரைவேட் என்ன இருக்கிறது?’ என்று சொல்லிக்கொண்டே, டைப் செய்திருந்த ஒரு பெரிய தாளை எடுத்து, “இந்தப் புயல் சேதத்துக்காக, நாம் இரண்டு வாரச் சம்பளம் இனாமாக வும். இரண்டு வாரம் அட்வான்ஸாகவும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டோம் அல்லவா? மொத்தத்திலே, இது நம்முடைய மாதச் சம்பளப் பட்டுவாடா; அதாவது அறுபதினாயிரம்” என்று ஆனந்தன் விளக்கமாக எடுத்துரைத்தான்.
“மாதச் சம்பளம் அறுபதினாயிரம் ஆகிறதா?” என்றார் ராமகிருஷ்ணன்.
‘ஆயிரம் பேருக்குச் சராசரி அறுபது ரூபாய் என்றால் பாருங்களேன்” என்றான் ஆனந்தன்.
“மாதம் இவ்வளவு செலவழித்துவிட்டால், என்னப்பா மிஞ்சப்போகிறது?” என்றார் ராம கிருஷ்ணன்.
“மிஞ்சாமல் போகுமா? என்றான் ஆனந்தன் சிரித்தவாறு.
‘ஆனால், கொடுக்கிறதிலேயும் ஒரு கணக்கு இருக்க வேண்டும். ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அப்புறம் அதைத் திருப்பித் திருப்பி மாற்றக் கூடாது. இல்லாவிட்டால், வேலை நடக்காது. இந்த அறுபதினாயிரத்தை நான்
ஒதுக்கி வைத்திருந்தேன். இப்போது, அண்ணா என்ன செய்துவிட்டார், தெரியுமா, அப்பா? இன்னும் இரண்டு வாரச் சம்பளம் அட்வான்ஸாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டார்.”
‘உன்னிடம் கலந்துகொள்ளாமலா?” என்றார் கைலாசம்.
“கலந்திருந்தால், இந்த வம்பே இருக்காதே தொழிலாளர் சங்கத்திலே இருக்கிறவர்களுக்கு அவருடைய சங்கதி தெரியும். ஏதோ ஒரு மனுவைத் தயார் செய்தார்கள். ஐயா, அப்பா என்று அவரிடம், ‘கொடுக்க வேண்டும்’ என்று கையெழுத்தை வாங்கிக்கொண்டார்கள் இந்தச் செலவை நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் முப்பதினாயிரம் என்றால் எங்கே போகிறது? வசூல் ஆகும் அட்வான்ஸுதான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
ஆனால், திடீர் திடீர் என்று பணம் நினைத்தாற்போலே வருமா? இதைச் சொல்வதற்காகத்தான் வந்தேன். நீங்கள் கடனாக முப்பதினாயிரம் கொடுங்கள்” என்று சிடுசிடுத்த முகத்துடன் தன் தந்தையின் ‘செக்’ புத்த
கத்தைக் கொண்டுவரப் பக்கத்து அறைக்குப் போனான்..
“அடிக்கடி இந்த மாதிரிதான் பிரசாத் செய்கிறாள். பணத்தின் அருமையே தெரியவில்லை அப்படி வளர்த்து விட்டது என் பிசகுதான். இருந்தாலும் அவனுக்குத் தரிய வேண்டாமா? வயசு ஆகவில்லையா? ஆனந்தன் அவனுக்குச் சின்னவன்தானே?”என்று குரலைத் தாழ்த் தினார்.
மீண்டும் தொடர்ந்து, ஒரு தம்படி வீணாக்க மாட்டான். கணக்கென்றால் கணக்குத்தான். ஒண்டியாய் (மெல்லிய குரலில்) பையன் அவ்வளவையும் கவனித்து வருகிறான்” என்றார்.
இதற்குள் ஆனந்தன் வரவே, அந்தப் பேச்சை நிறுத்தினார். செக் புத்தகத்தை வாங்கி முப்பதினாயிரத்துக்கு எழுதிக் கொண்டுவந்த செக்கில் கையெழுத்தைப் போட்டார். செக்கை வாங்கிக்கொண்டு,
இது பண விஷயம் மாத்திரம் அல்ல, மாமா. ஒருவன் நிர்வாகம் செய்யும் போது அவன் வழியே எல்லாவற்றையும் விட்டுவிட வேண்டும். இல்லாவிட்டால், கட்டாயம் வேலைக்குத் தடை வரும். நான் முடியாது என்று சொல்லிலிட்டால், அண்ணாவுக்கு என்ன கௌரவம்? அவர் பேச்சைத் தட்டாமல் கொடுப்பதனாலே, என்னிடத்திலே அவர்களுக்கு என்ன மரியாதை இருக்கும்?’
‘ ‘அவனுக்கு இளகிய மனம்” என்றார் ராம கிருஷ்ணன்.
“நான் மட்டும் பாவியா? இன்னும் வேண்டுமானும் லும் கொடுக்கத் தயார். ஆனால், வியாபாரத்தில் கண்டிப்பு வேண்டும். இல்லாவிட்டால், அது உருப் படாது. ஓர் ஊரிலே இரண்டு பைத்தியக்காரன் போல அல்லவா ஆகிவிடும்?”
‘அது என்னவோ உண்மைதான்” என்று ராம் கிருஷ்ணன் ஆமோதித்தார், ஆனந்தன் விடை பெற்றுக்கொண்டு போன பிறகு, கைலாசம் பிரசாதின்மீது குறை சொல்ல ஆரம்பித்தார்: “அவன் நன்றாகப் படித்தவன்; அறிவாளி; நேர்மை தவற மாட்டான். எல்லாம் இருக்கின்றன. ஆனால், தொழில் விஷயத்திலே ஆனந்தனுக்குத் தெரிந்ததில் பத்தில் ஒரு பங்கு அவனுக்குத் தெரியாது. இந்தத் தொழிலாளிகளோ – அப்பா! மிகவும் பொல்லாதவர்கள்! எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்பார்கள். அவர்கள் பிரசங்கம் பண்ணுவதைக் கேட் டீர்களானால், பி. ஏ., எம். ஏ. படித்தவர்கள் எந்த மூலை? உரிமைகளை அடுக்கிக்கொண்டே போவார்கள். ஆனால் கடமைகளைப்பற்றி அவர்களுக்குக்கு கவலையே இல்லை.”
“உரிமையையும் கடமையையும்பற்றி நியாயத்தோடு பேசும் தலைவர்கள், எத்தனையோ பேர் இருக்கி றார்கள்” என்றார் ராமகிருஷ்ணன்.
‘நான் இல்லை என்றா சொல்கிறேன்? எல்லாம் ஒரே மாதிரி இருந்தால் தொழிலே நடக்காதே! எப்பொழுது இரண்டுங் கெட்டானாய் இருக்கிறவர்கள்தாம் வம்புக்காரர்கள். சூதும் வாதும் வேதனை செய்யும் என்று பெரியவர்கள் சொன்னது ஒரு நாளும் வீண் போகாது; ஒழுங்காய் இருக்கிறவனுக்கு ஆண்டவன் நல்ல வழி விடாமல் இருக்க மாட்டான். என் விஷயத்தையே எடுத் துக்கொள்ளுங்கள். என் சங்கதி உங்களுக்குத் தெரியுமல்லவா?’
‘ஏதோ கொஞ்சம் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் ராமகிருஷ்ணன். ஆனால் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது அவருக்கு.
“ஒளிவு மறைவு எதற்கு? எல்லாவற்றையுந்தான் சொல்கிறேன், கேளுங்களேன். என் தகப்பனார் எனக்குக் கால் துட்டு வைக்கவில்லை. பதினைந்து வயசு வரையிலும் கூலிக்குத் தெருவிலே பனியன் விற்று வந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு வாங்கி வாங்கி லாபத் துக்கு விற்றேன். என் படிப்பெல்லாம் மூன்றாவது வகுப்புக்கு மேலே போகவில்லை. ஆனால், பனியனைப்பற்றிய வரையிலும், நூல் வாங்குவதிலிருந்து, அதைத் தயார் செய்து சில்லறையாகவோ மொத்தமாகவோ விற்கிற வரையிலும் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டேன். அப்புறம் அந்த லட்சுமி வீட்டுக்கு வந்தாள்; என் சம்சாரத்தைத்தான் சொல்கிறேன். எப்படியோ வியாபாரம் முன்னுக்கு வந்துவிட்டது. ஒரு புண்ணியவான் முதலில் ஐயாயிரத்துக்கு ஒரு தைக்கிற யந்திரம் வாங்கிக் கொடுத் தார்; கடனுக்குத்தான்; சும்மா இல்லை. நான் ஊக்கத்தோடு உழைத்தது வீணாகப் போகவில்லை. அதே வருஷத் திலே ஏழாயிரம் . சம்பாதித்துவிட்டேன். ,
அப்புறம் எப்படி எப்படியோ சந்தர்ப்பங்கள் வாய்த்தன இதோ பாருங்கள், லட்சுமி வரவேண்டும் என்று மனம் வைத்து விட்டால் என்னதான் ஆகாது? நம் சாமர்த்தியத்தாலே எல்லாம் நடந்துவிடும் என்று மட்டும் நினைக்காதீர்கள். நம் முயற்சி, உழைப்பு எல்லாம் தேவைதான். ஆண்டவன் அருள் இல்லாமற் போனால் ஒன்றும் நடக்காது. நான் இன்றைக்கு ஆயிரம் ஆட்களை வைத்துத் தொழில் நடத்துவேன் என்று நினைத்தேனா? இல்லை; முப்பதினாயிரம் ரூபாய்க்குச் ‘செக்கு எழுதுவேன் என்று நினைத்தேனா?” என்று கைலாசம் தாமே பேசிக்கொள்வது போல் நாற்காலியின் மீது சாய்ந்தார். கைலாசம் உழைப்பால் உயர்ந்தவர் என்பது ராமகிருஷ்ணனுக்குத் தெரியும். ஆனால் இளமையில் கூலிக்குப் பனியன் விற்றார் என்பதை அவர் அறியார். இருவரும் சில விநாடிகள்
மௌனமாக உட்கார்ந்திருந்தபோது, ஒரு போலீஸ் சேவகன் ராமகிருஷ்ணனிடம் வந்து போலீஸ் முறையில் வணக்கம் செய்து, அவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தான்.

(இன்னும் வரும்)

,

One Comment on “சங்கரராம்/இன்ப உலகம்”

Comments are closed.