
ஓடும் நதிகள்
ஒருநாளும் திசை மாறி
பயணம் செய்வதில்லை!
குறுக்கே காணும் பாறைகள் செடிகொடிகள் மரங்கள் இருந்தால் விலகி ஓடும்
ஓடும் பயணப் பாதையை
ஒருநாளும் மாற்றுவதில்லை!
நதிகள் என்றும்
தயங்கி நின்றதில்லை
மனிதா
ஓடும் நதிகள் பார்த்து
வாழ்வின் தத்துவம் படி
இலட்சியப் பயணத்தை விட்டு விடாதே
வாழ்வில் உயர்ந்து நிற்பாய்!
