விசா – 1 – கபிலவிசாகன்

எதுக்கப்பா இவ்வளவு சாஸ்திரிகள்? கல்யாணம்னா இவ்வளவு பேர் வேணுமா? என்ன பண்ணப் போறா இவா? ரொம்ப சிம்பிள் கல்யாணம்தான்னு வேற நீ சொன்னே.”
“இல்லடா செல்லம். இது மாப்பிள்ளை வீட்டு ஏற்பாடு. வேத பாடசாலையிலேந்து நாப்பது ஸ்டூடண்ட்ஸ் கூப்பிட்டிருக்கா, இரண்டு மணி நேரம் கோரஸா கணபாராயணம் பண்ண.”
“என்ன இது. என்னக் கேட்காம ? நான் நந்துவைக் கேட்கிறேன்.”
“சுதா, அதெல்லாம் செய்யாதேம்மா. நல்லதுதானே பண்றா. நமக்கு இப்படித் தோணாமல் போயிடுத்தே என்று நான் வெட்கப் பட்டிருக்கேன் தெரியுமா?”
“வேணாம்பா, எனக்குப் பிடிக்கல்லப்பா. நான் போய் நந்துகிட்ட வேணாம்னு சொல்றேனே.”
அதற்குள் அம்மா, “சும்மா இருடி. கல்யாண மண்டபத்தில இருக்கோம். இப்ப நீ எழுந்து மாப்பிள்ளை இடத்துக்குப் போகக் கூடாது.
“உனக்கு ஒரு கெட்ட பேரும் வராதடி அம்மா, நீதான் அதற்கெல்லாம் அப்புறம் போய் பெரிய முன்னேற்றம் கண்டவளாச்சே. என்னத்தான் திட்டுவா, பொண்ணை இப்படி வளர்த்தேன் என்று.
“இல்ல எம்பொண்ணு அமெரிக்காவில வேலை செஞ்சவ, ரொம்ப முன்னேறி இருக்கா. நாமெல்லாம் சுத்த கர்னாடகம்”னு என்னால சொல்ல முடியாது. சும்மா உட்கார்.”


ப்ரைடல் மேக் அப் ஆர்டிஸ்ட்கள் வந்தாச்சு.
“காஃபி சாப்பிடறேளா, இன்னும் அரை மணி நேரத்துல டிஃபன் ரெடியாயிடும்.”
“இல்ல வேணாம் சார். மேக் அப் முடியறதுக்கே ஒன்றரை மணிநேரம் ஆயிடும். நாங்க முடிச்சிட்டு வந்து டிஃபன் சாப்பிடறோம் சார். எந்த ரூம்ல பொண்ணு இருக்காங்க சார்.”
“இங்கதான் அடுத்த ரூம்ல இருக்கா. உங்களுக்கு இந்த ரூம் சௌகர்யப் படுமா பாருங்க”
“இந்த ரூம்தான் நல்லா பெரிசா இருக்கே, இந்த ரூம் போதும் சார். இந்த லெஃப்ட் சைட்ல இருக்கற திங்க்ஸ் எல்லாம் எடுத்து எங்களுக்கு இடம் கொடுங்க சார்…. போதும் சார், இந்த டேபிளும் ரெண்டு ஸ்டூலும் மூணு சேரும் போதும் சார். அடிக்கடி யாரையும் உள்ளே அனுப்பாதீங்க.”
“ஹலோ மேடம், வாவ். யூ லுக் சோ க்யூட். லாக்மே காரங்க உங்களை இன்னும் அழகாக்க முடியுமா” என்று வந்தவர்களில் ஒரு சின்னப் பெண் சொன்னாள்.
“ரேச்சல், சும்மா இரு. யூ ஹேவ் டு லேர்ன் ஹவ் டு டாக் வித் எ கஸ்டமர். சாரி மேடம். நீங்க லாஸ்ட் வீக் பார்லருக்கு வந்தப்ப கெமிஸ்ட் கிட்ட ஸ்கின் செக்கப் பண்ண ரிபோர்ட் இன்னும் வரல்ல. இப்ப 10 நிமிஷத்துல ஈமெய்ல்ல வந்திடும். ஸ்கின் கெமிகல் அலர்ஜி ஏதானும் இருக்கா உங்களுக்கு.”
“மிஸஸ் செரீனா, இதுதானே உங்க நேம். ஐ லிவ்ட் இன் த ஸ்டேட்ஸ் ஃபார் ஃபோர் யியர்ஸ். ஐ நோ வாட் வில் ஸ்யூட் மீ அண்ட் வாட் வில் நாட். ஷோ மீ த ப்ரைமர் அண்ட் த ஃபௌண்டேஷன் யூ ஹாவ் ப்ராட். ஐ வில் ஸீ.”
பாக்ஸைத் திறந்து எல்லா ப்ராடக்ட்களையுமே காண்பித்தார்கள்.
இன்னும் ரிபோர்ட் வரல்லயா. ஐ கான்ட் வெய்ட் எனி லாங்கர். யூ ஸ்டார்ட் த வொர்க். சரியா ஒன்றரை மணி நேரத்துல டாட் வந்து கூப்பிட்றுவாரு.”
மேக் அப் வேலை தொடங்கப்பட்டது.
ரூம் வாசலில் பேச்சுக்குரல்.
“இப்ப உள்ள போவேணாம்டா, லக்மே காரங்க உள்ள இருக்காங்க. இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்.”
“என்ன சித்தப்பா இது. சுதா ஏற்கனவே ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கா. மேக் அப் வேற செய்யணுமா. ரொம்ப பணத்தை வேஸ்ட் செய்யறீங்க சித்தப்பா.”
“மிஸ் ரேச்சல், ப்ளீஸ் லாக் த டோர் இன்சைட். எனிபடி மே கம் அண்ட் டிஸ்டர்ப்.”
ரூம் கதவு உள்புறம் தாளிடப் பட்டது.
“மேடம் ரெஸ்ட் ரூம் போகணும்னா போங்க, ஆரம்பிச்சா எழுந்திருக்கக் கூடாது.”
போய்விட்டு வந்தாள்.
“ஜஸ்ட் டூ மினிட்ஸ். ஒரு கால் பண்றேன்.”
“மேட் பாய் திஸ் ஃபெல்லோ, ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருக்கு. குட் ஃபார் நத்திங். இப்படி உட்காரட்டுமா, நீங்க ஸ்டார்ட் செய்ங்க”
“சோஃபால வேண்டாம் மேடம். இந்த சேர்ல உக்காருங்க”
“இந்த உட்டன் சேர்லயா?”
“யெஸ் மேம். யூ கான்ட் சிட் ஸ்ட்ரைட் இன் தி சோஃபா.”
அழகாக்கும் படலம் ஆரம்பித்தது.
“ஐஸ்வர்யா ராயை கல்பனாத் ராய் மாதிரி ஆக்கப் போவுது எங்க முசுடு பாஸ். லாக்மே காரன் எங்க இதைப் புடிச்சானோ தெரியல்ல. இதுக்கு அழகா இருக்கும் பொண்ணையே பிடிக்காது.” (ரேச்சலின் மைண்ட்வாய்ஸ்)
“ஞான விநாயகனே” தவில் சத்தத்துடன் நாதஸ்வரக் கச்சேரி கேட்க ஆரம்பித்தது.
“ஆதி தாளத்தை எவ்வளவு அருமையா வாசிக்கிறார் அந்தத் தவில்காரர். லக்கி ஃபேமிலி நீங்கள் . எங்கள் மேரேஜில் பாண்டுதான் வெஸ்டர்ன் க்ளாசிகல்தான்.”
“மிஸஸ் செரீனா, உங்களுக்கு கர்னாடிக் ம்யூசிக் பிடிக்கும்னா மேக் அப் போட்டபிறகு எங்க அப்பாகிட்ட பேசுங்க. மணிக் கணக்கா பேசுவார். “
ரேச்சல் குரல்: “பாண்ட் பரேட் இல்லையா மேம்”
“இருக்கு இருக்கு. மாப்பிள்ளை கழுதை மேல சாரி ஓபன் கார்ல ஏறி வரும்போது மட்டும். ரப்பிஷ் ப்ராக்டிஸ். கேர்ல் நடந்து வரும்போது ஒரு ம்யூசிக்கும் கிடையாது. வீ ஹாவ் டு சேஞ்ச் த என்டையர் ஸ்க்ரிப்ட் ஆஃப் வெட்டிங்.”

(இன்னும் வரும்)