இன்று (21.03.2025) நடந்த விருட்சம் கவிதைப் பட்டறையில் வாசித்த கவிதை

பொன்வானத்திலிருந்து
வந்து விழும் முத்துப்பரல்கள்
எல்லாப் பருவத்திலும்
நான் மழையைப் பார்த்திருக்கிறேன்
பால்யம் தான்
என்னைக் கைப்பிடித்து
அழைத்துச் சென்றது
மழையில் நனைவதற்கு
இப்போது வாழ்க்கையிலிருந்தும்,
இயற்கையிடமிருந்தும் என்னை நான்
தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டேன்
இப்போது பெய்யெனப் பெய்தாலும்
எனக்கு அது மழையாகத் தெரிவதில்லை…

அருமை