
‘சொல் புதிது’ நிகழ்வுகளில் மிகச் சிறந்த நிகழ்வு என்று இதைச் சொல்லத் தோன்றுகிறது .
ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக் கொண்டு அதைப் பற்றிய புரிதலை, பங்கேற்ற கவிஞர்களிடம் கேட்டதில் கிடைத்த அந்தக் கவிதை பற்றிய பல்வேறு கோணங்கள் மிகவும் அருமையாக இருந்தன.
இன்று எடுத்துக்கொண்ட கவிஞர் ‘ ஞானக் கூத்தன் ‘ . அவரது கவிதைகள் மூன்று .
தொடர்ந்து ஒரு தலைப்பு கொடுத்து ( ‘ மழை’ ) குறுங்கவிதை பத்து வரி அளவில் எழுதச் சொல்ல, பங்கேற்ற கவிஞர்கள் சில நிமிடங்களில் எழுதி வாசித்த கவிதைகளின் கருத்துக்கள் பல விதமாய் வெளிப்பட்டதை ரசிக்க முடிந்தது .
இறுதியில் கவிஞர்களிடம் கேட்ட கருத்துக்குப் பலரும் , இது போன்ற நிகழ்வை மாதம் இருமுறை நடத்தலாம் என்று குறிப்பிட்டது கவிஞர்களின் விருப்பத்தைக் காட்டுகிறது .
நான் சொன்ன கருத்துகள்:
1 . இதில் அரசியல் சம்பந்தப்பட்ட கவிதைகளைத் தவிர்க்கலாம். அதில் மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்பட்டு மனவருத்தம் ஏற்படுத்தலாம்.
இன்றும் ஞானக் கூத்தன் அவர்களின் முதல் இரண்டு கவிதைகளுக்கு இரண்டு விதமான கருத்துகள் இருப்பதைக் கேட்க முடிந்தது. உடனே கருத்து சொல்லும்போது சில வார்த்தைகள் தவறாக விழுந்து மற்றவர் மனம் புண்பட வாய்ப்பு உண்டு. எனவே அரசியல் கவிதைகள் தவிர்க்கலாம்.
2 . பங்கு கொள்பவர் தவிர பார்வையாளர்களையும் அனுமதிக்கலாம். ஆனால் முன்பே பேர் கொடுத்தவர்கள் மட்டுமே கவிதை பற்றிய கருத்துக்கள், கவிதைகள் சொல்லலாம் என்று நேர் படுத்தலாம்.
3 . புரிவதற்கு மிகவும் கடினமானவை என்று அழகியசிங்கர் நினைக்கும் சில கவிதைகளைக் கருத்துகள் கேட்க எடுத்துக் கொள்ளலாம்.
இடையில் ஒரு வைரஸ் ஆசாமி வந்து ‘ I will kill you ‘ என்ற பேரோடு வந்து விட்டு சிறிது நேரத்தில் ‘ I am going ‘ என்று சொல்லி விட்டு விடைபெற்றது இந்த ஜூம் லிங்க் வைரஸ் அட்டாக்கிற்கு வழி விடுகிறது என்பதைத் தெரியப்படுத்தியது.
ஜூம் செக்யூரிட்டி க்கு என்ன செய்யலாம் என்பதை யோசிக்க வேண்டி உள்ளது .
சிறப்பான நிகழ்வு. அழகியசிங்கருக்கு நன்றி .🙏

மிக சிறப்பாக நிகழ்ச்சியில் அவரது கோணத்தை உடனடியாக பதிவு செய்து விட்டார்