
இன்றைய (21-03-2025) நவீன விருட்சம் கவிதைச் சந்திப்பில் நான் வாசித்த உடனடித் தோன்றல் கவிதை!
வருடா வருடம்
வந்து வந்து பெய்யும்
இந்த மழையை
என்ன செய்யலாம்?
அண்டா குண்டாக்களில்
பிடித்து வைக்கலாம்.
கறுப்புக் குடை பிடித்து
கண்டனம் காட்டலாம்.
துணிமணிகளை
ஈரம் படாமல்
ஒளித்து வைக்கலாம்.
கவிதை எழுதலாம்.
ஆனால்
நான் நனையவே விரும்புகிறேன்-
இந்த மழையில்.

அருமை
Super