
I
அவனுக்கு அந்தச் செய்தி ஒரு அதிர்ச்சியைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும். வந்தவரை அவனுக்கு
அடையாளம் தெரியவில்லை; அதை அவன் சொல்லவும் செய்தான்.
”நீங்கள் யாரென்று தெரியவில்லையே?” அவர் உடனடி யாகப் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் கழித்து “நீங்கள் தானே ‘நகுலன்’ என்பவர்?”
‘ஆமாம் ஏன்?*
”உங்களுக்கு ‘நவீனன்’ என்று ஒரு நண்பர் உண்டு இல்லையா?”
“ஏன்?”
அவர் மறுபடியும் மறுபடியும் மௌனமாக இருந்தார். ” நான் அவனைக் கடைசியாகச் சந்தித்தது சென்னையில் மௌன் ரோடில் ராமநாதன் வீட்டில் என்று ஞாபகம். ராமநாதன்கூட இப்பொழுது அங்கில்லை என்று நினைக்கிறேன்”
இப்பொழுது அவன் இல்லை”
அவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. தன்னைச் சமாளித் துக் கொண்டு “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்றான்.
அவர் மீண்டும் அழுத்தமாக “அவன் இப்போது இல்லை” என்றார்.
அவன் அவரிடம் மீண்டும் “நீங்கள் யார்தெரியவில்லையே!”
அவர் “ஒருவகையில் அவன் சகோதரன். ஆனால் அவ னுக்கு அவனைத் தவிர வேறுயாரைப் பற்றியும் ஒரு சிந்தனை இருந்ததாகத் தெரியவில்லை”
“அப்படிச் சொல்லாதீர்கள்”
“ஏன்? எனக்கு அவனைத் தெரிந்த அளவுக்கு உங்களுக்கு அவனைத் தெரிந்திருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை”
“ஏன்?”
“முதலாவதாக நான் அவன் சகோதரன்” அவன் மீண்டும் பேசாமல் இருந்தான்.
அவர் தொடர்ந்தார்: “இரண்டாவதாக நான் ஒரு எழுத்தாளன் இல்லை”
அவனுக்கு இப்பொழுது
ஒருவாறு
விஷயம்
பிடிபட்டது
என்றுதான்
சொல்ல வேண்டும்.
“கான்ஸர்”
அவனுக்கு என்னவோ செய்தது – எழுதுவதென்றால் என்னவெல்லாம்தான்செய்ய வேண்டியிருக்கிறது. இந்த
யுகத்தில் மனிதன் ப்ளேக், காலரா, டிஃப்தீரியா இவைகளுக் குப் பயப்படுவதைப்போல … …
அவனுக்குத் தெரியாமல் இல்லை. இப்படி எழுதுவதில் எல்லாம் ராமநாதன் எழுத்தின் சாயை இல்லாமல் இல்லை என்று.
ஆனால் அவர் இன்னும் எழுந்து போன பாடில்லை. அது அவன் கையில் இல்லையா இருக்கிறது.
”நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் நவீனனுக்குப் பல சிநேகிதர்கள் இருந்தார்கள்-சிவன்…’
“அந்தக் குடியனை எனக்குத் தெரியும்'”
“ஹரிஹர சுப்ரமண்ய ஐயர்”
”அவர் இப்பொழுதும் வேலையில் இருக்கிறாரா? அவனைத் தேடிக் கொண்டு ஒரு தடவை எங்கள் வீட்டிற்கு அவரே வந்திருக்கிறார்”
“கேசவமாதவன். சங்கர சுப்ரமண்யம்”
“அவாள்லாம் பெரிய கைகள்”
“நடராஜன்”
“ரொம்பத் தங்கமான மனுஷன்”
“ராமநாதன்”
”அவர் இப்பப்பெரிய வேலெலெ இருக்ரார்னுன்னு கேள்வி’
”கேட்க மறந்து விட்டேனே உங்கள் பேர்”
”உங்களை ஏன் சொல்ல வேண்டும். அவன் உங்ககிட்டத் தனக்கு இப்படி ஒரு சகோதரன் இருக்கான்னு கூடச் சொல்லி யிருக்கமாட்டானே”
அவன் ஒன்றும் சொல்லவில்லை.
”என் பெயர் சந்தானகோபால ராமன்”
அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நவீனனுக்கு இப்படி ஒரு சகோதரனா என்று. அவன் நெற்றியில் நாமம் துலங்கியது.
”ஏன் என்னை அப்படிப் பார்க்றேள்?”
“இல்லை”
”கல்யாணத்திற்கப்பறம் நான் வைஷ்ணவ ஜனதோ”
“வயது 53 கூட இருக்காது. நம்பக் கூட முடியவில்லை”
“நம்ப முடியல்லெ – இல்லையா? ஆனால் அவன் நிச்சய மாக இப்ப இல்லை”
“ஏன் அப்படிச் சொல்கிறேள்?”
“இல்லை. அவன் நிச்சயமாச் செத்துட்டான்`
அவர் அந்த வீட்டை ஒரு பார்வை பார்த்தார். ”சொந்தவீடா?”
“ஆமாம்”
“இங்கெல்லாம் ஸென்ட் 1000, 2000 இருக்குமே” “இருக்கலாம்”
“கடைசிலெ அவன் என்னோடுதான் இருந்தான். தெரி யுமோ இல்லையோ”
“தெரியாது. அப்பொழுது நான் சென்னையில் இல்லெ”
‘கடைசிலெ அவா ரெண்டு பேரும் போனப்றம் இவன் இங்கெ வந்து கடைசிலெ கடைசிலெ, அவர் கூட ஒரு மாதிரி ஆயிட்டார்ன்னு கேள்வி. உங்களுக்குத் தெரியுமோல்லியோ?”
அவன் ஒன்றும் சொல்லவில்லை; அவனுக்குத் தெரியும் என்ப தால்; நவீனன் அவனிடம் தன் பெற்றோர்களைப் பற்றிச் சொல்லியிருந்தான் என்பதால் -ஒரு தடவை-அவன் சற்றுக் குடித்திருந்தான்
என்று தோன்றியது-சிரித்துக்கொண்டே இவனிடம் பந்தங்கள், பாசம், உறவு – பாசம், பந்தங்கள், உறவு – உறவு, பாசம், பந்தங்கள்- எல்லாம்தான். இப்பொழுது அவன் என்ன சொல்ல? ஆனால் அவர் இன்னும் போனபாடில்லை. மறுபடியும் தொடங்கினார்.
“நவீனன்” அப்படி நல்ல எழுத்தாளனா? எப்பொழுதும் எழுதிக் கொண்டேயிருப்பான்”
“ஏன் கேட்கிறீர்கள்?”
“நான் அவன் எழுதுவதைப் பார்த்திருக்கிறேனே தவிர, அவன் எழுதினது பிரசுரமானதாகத் தெரியவில்லை. இல்லா விட்டாலும்…..
“இல்லாவிட்டாலும்…
‘அவதான் சொல்வா. ஏன்னா (அவ ஏ’ன்னான்னுதான் என்னைக் கூப்பிடுவா) ‘குமுதம்’ மாதிரி பத்திரிகெலாம் ஒரு கதைக்கு ரூ 100/- 200ன்னு கொடுப்பாளாமே.
உங்க தம்பி ஒன்னும் அதிலே எழுதறதில்லையோன்னு. ‘குமுதத்திலே’ அப்படியெல்லாம் குடுக்கறானா என்ன?”
”குடுக்கறா”
இவனுக்கு எழுதினான்னவாம்?”
இவனாலெ முடியாது’
“அப்பன்னா நான் நினைச்சது சரிதான்”
“நீங்க என்ன நினைச்சேள்?”
“அதெ விட்டுத்தள்ளுங்கோ. ஒரு தடவை இவன் இங்க வந்தப்றம் வீட்லெ பைப்-வெளிலே இருந்து உள்ள வர லைனிலே ஒரு இடம் பொத்துண்டுடுத்து.
தண்ணி கொட்டிண்டிருக்கு. இவன் மெயினை நிறுத்திப் பார்த்திருக்கான். சரிப்படலை. அதுக்கப்பறம் அவன் புத்தி போகலெ”
“உம்”
“உடனே ஒரு ப்ளம்பரைக் கூப்பிடணும்னு தெரியலை. நான் வந்ததும் வெளிலே போய் வீட்டுக்குக் கனெக்ஷன் கொடுக்ற லைனை மூடினேன். அது கூட”
“அது கூட”
“இவன் செய்யக்கூடாதுன்னு. முதல்லெ இவனுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் தனியாகக் கனக்ஷன் உண்டுன்னு தெரியாது. இரண்டாவது அது (வெளிலே
கனக்ஷன்) கவர்ன்மெண்டைக் கேக்காம செய்யக் கூடாதுன்னு இவனைப் பத்தி – இவ்வளவு சாதாரண விஷயத்தைப் பத்திக்கூட ஞானம் இல்லாதவனைப் பத்தி என்ன நினைக்கிறேள்?”
‘”அவன் என்ன சொல்றான்?”
குறிப்பு :
நகுலனின் இந்த நாவலைத் தொடர்ந்து தினந்தோறும் daily.navinavirutcham.in பத்திரிகையில் தொடர்ந்து வரும்.
வாசிப்பவர்கள் கவனத்துடன் இந்த நாவலை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

One Comment on “நகுலன்/நவீனன் டைரி”
Comments are closed.