
- அசோகமித்திரன் பெயரில் ஒரு சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமென்று என் நெடுநாள் விருப்பம். அவர் நினைவு நாளை (23.03.2025) ஞாபகப்படுத்தும் விதமாய் இத்திட்டத்தைச் செயல் படுத்த விரும்புகிறேன்.
- போட்டிக்கு ஒரே ஒரு கதையை மட்டும் அனுப்ப வேண்டும்.
- கதை 800 வார்த்தைகளிலிருந்து 1000 வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.
- சரித்திர கதைகள், மர்மக் கதைகள் அனுப்ப வேண்டாம்
- யூனிக்கோடில்தான் கதை அனுப்ப வேண்டும்.6. Azhagiyasingar.virutcham@gmail.com என்ற இ மெயிலில் அனுப்ப வேண்டும்.
- ஏற்கனவே பிரசுரமான கதையை அனுப்பக் கூடாது.
- தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் உண்டு. தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கு முதல் 3 பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் ரூ10000 வரை வழங்கப்படும்.
- கதைகளைக் குறித்து கடிதத் தொடர்போ தொலைப் பேசித் தொடர்போ கூடாது
- தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எல்லாம் புத்தகமாக வரும்.
- கதைகள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி : 30.04.2025
- கதையுடன் உங்கள் முகவரி, உங்கள் இ மெயில் முகவரி, தொலைப்பேசி எண் அனுப்ப வேண்டும்
அன்பன்,
அழகியசிங்கர்
