ராம் சிதம்பரம் கவிதைகள்

1.
நான்
ஒரு பறவையை நோக்கி போனேன்.
அந்த பறவையோ
ஒரு பூவை நோக்கி போனது.
அப்போது
அந்த பூ என்ன நினைத்திருக்கும்?

  1. தாழைக்கோழியே
    அதிகாலை உன்னைப்பார்த்த போது
    உன் குட்டிக்கு உணவிட்டுக் கொண்டிருந்தாய்.

நான் படிக்கச்சென்று
பின் வந்து பார்த்தேன்
நீ எதையோ தேடிக்கொண்டிருந்தாய்.

பின்னர் மீண்டும் வந்து பார்க்கையில்
உன்னைக் காணவில்லை.

பறவையே நீ எங்கே போனாய்?
உன் குட்டி உன்னைத் தேடாதா?

3.

மரங்கொத்தி பறவையே
எங்கே போனாய்!
உன்னை காணவில்லை?
முன்பு ஏன் வந்தாய்?
உன்னை பார்த்த ஆசையில்,
உன்னை தினமும் தேடுகிறேன், அங்கே!
மீண்டும் ஒருமுறை வருவாயா?
உன்னுடன் பேச வேண்டும்
மீண்டும் ஒருமுறை வருவாயா?