சாய்ரேனு பானு/புத்தர் இன்று பிறந்தால்

புத்தர் இன்று பிறந்தால்
புத்தம்புதிதாய் என்ன வரும்?
புத்தர் என்றும் புத்தரே.
சத்தியம் என்றும் சத்தியமே.

இன்னொரு போதி புகழ்பெறும்
இன்னொரு அசோகன் பிறப்பெடுப்பான்
பின்னொரு சங்கரன் வந்திடுவான்
இனியொரு புத்தர் பிறந்துவந்தால்!

புத்தர் என்று பிறந்தாலும்
நித்தம் நடப்பதுதான் நடக்கும்.
புத்தம் என்பது மனதினிலே
புதிதென்ன காலத்தின் ஓட்டத்திலே?