
சுந்தர் தன் நண்பன் சுரேஷை உற்றுப்பார்த்து
திகைப்புக்குள்ளானான்.
“என்ன அப்படிப்பார்க்கிறே?”
“இல்லே உன் முகத்திலே எதேவோ மிஸ் ஆகுதே”
ஓ அதுவா என்னனு கெஸ்பண்ணு”
“கெஸ்ஸு கேஸு ஒண்ணு தாடி வெச்சுக்க
உனக்கு ரொம்பப்பிடிக்குது ஏன்னா அதுதான்
லேட்டஸ்ட் பேஷன்னு சொல்லுவே. சினிமா
மற்றும் சின்னத்திரை நடிகர்கள்கூட தாடியுடன் தான் நடிக்கிறாங்கன்னு சொல்லுவே இப்ப திடீர்னு தாடி எடுத்திட்டு
வந்து நிக்கிறே. என்னாச்ச?”
“ஓ அதுவா? என்னை தாடியோடு பார்க்க என்
பெண்டாட்டிக்குப்பிடிக்கலையாம். அவ வேலைபார்க்கிற ஆபீசிலே தாடியோடு
அலையும் சக ஊழியர்களை தினம் பார்த்து
போரடிச்சுப்போச்சாம் என்னை உடனே தாடியை எடுத்துடும்படி சொன்னா. நான்
மறுத்தேன். உடனே அவள் நான்தாடியை
எடுத்துட்டால் இருபதாயிரம் ரூபாய் கொடுப்ப
தாகச்சொன்னாள்.இந்த சின்ன விஷயம்
“”கூட பணம் சம்பாதிக்க உதவும்னா அதை
விடுவானேன்னு உடனே….நான்..”
“அடப்பாவி. இதற்குப்பெயர் என்ன?லஞ்சமா?”
சுந்தர் திகைத்துப்போனான்.
