
குளமாய்ப் பூக்கும்
மழை விதைகள்.
முகிலின் குரல் எச்சில்.
வானச் சுவரொட்டி
பல்லிக் குமுறல்.
பரிதி கிழித்து
தொங்கும் மின்னல்.
தண்ணீர் பின்னி
நீர் நூல் திரளின்
வேர் கிளைத்த
மலை முளைகள்
காற்றின் சவுக்குத் தொடர்
உருகிய கண்ணாடிக்
கடல் அலைப் பாறை.
கணங்கள் கழன்றது
பருவத்தின் ஓர்
ஒற்றை பிரிந்தது
வெளியில் மாரிச்
கவர் எழுந்தது
தூரிகை இயற்கை
புரண்டது.
