அ பெருமாள்/பாதயாத்திரை

1

1994ஆம் வருடம் மகா சிவராத்திரி சமயம் எனது நண்பர் திரு. நாகராஜ் பெங்களூரில் இருந்து தர்மஸ்தலாவுக்குப் பாதயாத்திரை சென்று வந்தார். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் வழியில் மக்கள் அளித்த உபசரிப்பு பற்றியும், உடன்வரும் சமையல்காரர்கள் அளிக்கும் சுவையான உணவு பற்றியும், வழியில் கிடைக்கும் சுகமான அனுபவங்கள் பற்றியும் சுவைபடக் கூறுவார்.
*கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” என் பார்கள். மெல்ல மெல்ல எனக்கும் பாதயாத்திரை போக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால் ஒவ்வாமை நோயின் தீவிரப் பிடியில் இருந்த என்னால் அது முடியுமா என்ற தயக்கமும் இருந்தது. ஒரு வேளைக்கு ஐந்து வகையான மாத்திரைகள். ஒரு நாளைக்கு மூன்று வேளை. தொடர்ந்து ஐந்து நாட்களோ அல்லது ஏழு நாட்களோ சாப்பிட வேண்டும். அதன்பின் சிறிது காலம் சுகமாக இருப் பேன். ஓரளவு ஓடி ஆடி வேலை பார்க்க முடியும். நோயின் தீவிரம் குறைந்தாலும் ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரை வீதம் மழைக்காலம் முழுவதும் சாப்பிட்டே ஆக வேண்டும். வெய்யில் காலம் ஆரம்பித்தால்தான் விடுதலை. அந்த நிலையில்
நான் 330 கிலோ மீட்டர் நடக்க விரும்பினால் அது கனவில் மட்டுமே சாத்தியம்.
ஆனால் நாகராஜ் தொடர்ந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து என்னைப் பாதயாத்திரை செல்லும்படி அறிவுரை கூறுவார். மெல்ல மெல்ல எனக்கும் பாதயாத்திரை செல்ல ஆசை துளிர்விட்டது. அதற்கு என் உடல் மட்டும் காரணம் அல்ல. என் சொந்த வாழ்க்கையும் காரணம். என் மூத்த பெண்ணிற்கு 1991ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சிறிது காலம் குழந்தைப் பேறு இல்லை.
என் நண்பர் திரு. புட்டண்ணா அவர்கள் ஒரு யோசனை சொன்னார். பெங்களூரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காட்டி சுப்ரமண்யா (காட்டு சுப்பிரமணி யர்) என்ற திருத்தலம். நாகதோஷம் போக்கும் புண்ணிய பூமி அது. அங்கு சென்று வழிபட்டு, கோயிலில் தரும் உரிக்காத தேங்காயை வாங்கி வந்து உண்மையான நம்பிக்கையுடன் பூசித்து வந்தால் குழந்தை உண்டாகும் என்று கூறினார். சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவரும், அவரது துணைவியாரும் என் மகள் மற்றும் மனைவியை அழைத்துச் சென்று வந்தார்கள்.
அடுத்து எங்கள் குலதெய்வம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய மகளையும் மருமகனையும் அழைத்துச் சென்று வந்தேன். வேறு சில அன்பர்கள் அறிவுரைப்படி மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு மந்திராலயம் சென்றேன். மகான் ராகவேந்திரரைத் தரிசனம் கண்டு, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகங்களுக்கு மஞ்சள் குங்குமம் அர்ப்பணித்து தீபமேற்றி வழிபட்டுத் திரும்பினோம்.
1994ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் இப்பயணத்தை மேற்கொண்டோம். அந்த மாதமே என் மகள் தாய்மை அடைந் தாள். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குழந்தை உண்டானது முக்கியம் என்றால் அதைவிட க இன்னும் முக்கி
யம் அல்லவா? எனவே ஆண்டவனை வேண்டிக்கொண்டு பாதயாத்திரை செல்லத் தீர்மானித்தேன். அப்படி பாதயாத் திரை செல்ல ஊக்கமும் உற்சாகமும் அளித்ததுதான் நாகராஜின் தூண்டுதல். எனக்கிருந்த தயக்கத்தைப் போக்க முதலில் சிறிது தூர யாத்திரை சென்று பார்க்கலாம் என்று யோசனை சொன்னவரும் அவரே.
என் நல்ல நேரம். ஒரு அன்பர் காட்டி சுப்ரமண்யாவுக்குப் பாதயாத்திரை ஏற்பாடுகள் செய்தார். மாதமோ சித்திரை. கடுமையான வெயில்காலம். ஆனாலும் ஒவ்வாமை நோய் என்னைப் பாதிக்காத நேரம். எனவே நடப்பதில் சிரமம் இருக்
காது, துணையாக நாகராஜும் வருவதாக உறுதி கூறினார். எனவே எந்தத் தயக்கமும் இன்றி என்னையும் அந்தப் பாத யாத்திரைக் குழுவில் இணைத்துக் கொண்டேன். பயணக் கட்டணமாக நூறு ரூபாய் வசூலித்தார்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்தான் கோயிலில் விசேஷம். எனவே புதன்கிழமை பெங்களூரில் இருந்து புறப்பட்டு வியாழன் இரவு கோயிலை அடைந்து, வெள்ளிக்கிழமை காலை தரிசனம் என்று ஏற்பாடாகி இருந்தது.
நடக்க முடியுமா என்ற பிரமிப்பு ஒருபுறம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சில நண்பர்கள் மனைவி குழந்தைகளுடன் பாதயாத்திரை வருவதை அறிந்தபோது பயணம் வேகமாக இருக்காது; குழந்தைகள் நடக்கும் அளவுகூட நம்மால் முடியாதா என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. முயற்சி செய்யாமல் இருப்பதைவிட, முயற்சி செய்து தோற்பதே மேல். ஏனெனில் புறப்படுவது நம் கையில் என்றால் முடித்து வைப்பது ஆண்டவன் கையில். பயணத்தைத் தொடங்குவோம். இடையில் முடி யாமல் போனால் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு பஸ் ஏறிவிடுவது எனத் தீர்மானித்துக் கொண்டேன். என் வீட்டாருக்கு என் பாதயாத்திரை பைத்தியக்காரத்தனமாகப் பட்டது என்றாலும் அவர்கள் தடை சொல்லவில்லை.
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்பார்கள். அந்தப் புண்ணிய நாளில் என் வாழ்வின் புது அத்தியாயத்தைத் தொடங்கினேன்.
மேக்ரி சர்க்கிள் என்னும் இடத்தில் அனைவரும் கூடி பின் எலகங்கா, ராஜன குண்டே வழியாக குஸ்தி பாசப்பா சர்க்கிள் என்னும் இடத்தை அடைய வேண் டும், அன்று இரவு அந்தப் பயணத்தை ஏற்பாடு செய்பவரின் வீட்டில் தங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
“சோறு கண்ட கண்ட இடம் சொர்க்கம்; திண்ணை கண்ட இடம் தூக்கம்” என்று சோம்பேறிகளைப் பார்த்துக் கூறுவார்கள். அது பாதயாத்திரி சுளுக்கும் பொருந்தும். பல சுவையுடன் வீட்டார் தரும்
உணவைக்கூட குறை சொல்லும் நாக்கு பசியின் தீவிரத்தால் எதைக் கண்டாலும் விழுங்கிவைக்கும். பஞ்சுமெத்தையாக இருந்தாலும் புரண்டு புரண்டு தூக்கம் வராமல் தவிப்பவர்கள் கூட நடந்த அசதியால் மரநிழலோ, திண்ணையோ கிடைத்தால் கூட கையைத் தலையணையாக வைத்து உறங்கிவிடுவார்கள். அந்த வகையில் ஒரு நியதிக்கு உட்பட்ட சுகவாழ்வை மறந்து, கிடைப்பதைப் பெற்று மனத்திருப்தி அடைய இந்தப் பாதயாத் திரை உங்களைப் பக்குவப்படுத்தி விடும். உடலையும் உள்ளத்தையும் உறுதி ஆக்குவது பாதயாத்திரைதான். நல்ல குடிநீர் பாதி வியாதியைத் தடுக்கும் என்றால் பெருகிவரும் வியர்வை மீதி வியாதியைப் போக்கிவிடும்.
பட்டினி கிடந்து செத்தவனைவிட அதிகம் உண்டு அழிந்த வர்களே அதிகம். பசித்து உண்ணாதவன் நோயை வரவழைத்துக் கொள்கிறான். பசி எடுக்க நல்ல உழைப்பு அவசியம். ஆனால் அப்படி உழைக்க எல்லோராலும் முடியுமா? உடல் பயிற்சி, காலையோ மாலையோ சிறிது நடை என எல்லோராலும் பழக்கப்படுத்த முடியாது. ஏனெனில் நடைமுறை வாழ்க்கை, வேலையின் தீவிரம், நேரமின்மை எனப் பல காரணங்கள் கூறலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இத்தகைய நெடுந்தூரப் பயணம் ஒரு வரப்பிரசாதம்.
ஒரு பாதயாத்திரை என்பது வீட்டில் இருந்து துவங்கப் பட்டுக் கோயிலில் முடிக்க வேண்டும் என்பது மரபு. வீட்டில் இருந்து நடந்து வர முடியாதவர்கள் ஒரு பொது இடத்தில் கூடி பின் யாத்திரை தொடர்வார்கள். என் முதல் பயணம் என்பதால் வீட்டில் இருந்தே சுமார் காலை ஆறு மணிக்கு நடக்கத் தொடங்கினேன். மேக்ரி சர்க்கிளை ஏழேகால் மணிக்கு அடைந்தேன். ஏற்கனவே வந்து இருந்தவர்கள் போக இன்னும் சிலர் சுமார் ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அங்கு குடிகொண்டிருக்கும் ஆஞ்சனேயருக்கு வழிபாடு நடத்தி, பின் அனைவரும் நடக்கத் தொடங்கினோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன