பாக்கியலட்சுமி/நிராகரிப்பு

ஞானக்கூத்தன் நினைவாகப் பரிசுப் பெற்ற கவிதை

மயக்கும் தமிழில் மனம் நிறைந்த
கருத்துக்களைக் கோர்த்து
தணிக்கை ஒன்றில் அரங்கேற்றினேன்
கொங்கு தமிழில் கொடுத்த உரையை
அனைவரும் ஆர்ப்பரித்து ரசித்தனர்
சகலரின் உரைகளை விட எனது சிறப்பாகவே
இருந்ததென்ற மனநிறைவில்
கல்லொன்று பெரிதாய் விழுந்தது
தேர்ந்தெடுக்கப்பட்டதில் விடுபட்டது என் பெயர்
விழாப் பொழுதில் என் சொற்கள்
வேறொருவர் வாயிலிருந்து
பிரவாகமாய் வெளிப்பட்டது
கைத்தட்டலில் அரங்கம் நிறைந்தது
யாரிடம் சொல்லிப் புரியவைப்பேன்?
என் கையறு நிலையை!
தணிக்கை குழுவினர் தனிக் கை
என்பது தெரியாமல் போயிற்று
நிராகரிப்பின் வலியை விடத்
துரோகத்தின் வேதனை
பெரும்பாடு படுத்தியது.
மேடையேறிய சொற்கள்
என்னையும் மேடையேற்றும்
என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
பெரியோர் எப்போதும் சிறியோராகவே
இருக்கும் உலகைக்
கண்டிப்பாகச் சரிசெய்வேன்