ரம்யா வாசுதேவன்/இன்று நானும் கிருஷ்ணாஜியும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி

வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் வாழ்க்கையை குறித்து சுருக்கமான பதிவு ஒன்றை வெளியிடலாமே என்று தோன்றியது.

ஜே.கே. என்று அந்தக் காலத்தில் பேசிய எல்லோரும் அவரை intellectual personality ஆகவே பார்த்தனர். ஆனால், அவரை நெருங்க நெருங்க அவர் வேறு என்பதை புரிந்து கொள்வோம்.

அவரை புரிந்து கொள்ளும் சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.

மேலும், அவரைக் குறித்த ஒலிப்பதிவு இணைப்பையும் கீழே அளித்திருக்கிறேன்.

கீழே முதல் பகுதியை வெளியிடுகிறோம்.

இரண்டாவது பகுதி நாளை வெளிவரும்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி என்கிற அற்புத மலர்

இந்தியாவில் 19 மற்றும் 20 நூற்றாண்டில் நிறைய ஞானிகள் அவதரித்தபடி இருந்தார்கள். 1800களின் தொடக்கத்திலிருந்து 1950 வரையிலான கிட்டத்தட்ட 150 வருடங்களில் எத்தனை ஞானிகள் அவதரித்திருக்கிறார்கள். அதில் ஒருவரான ஜே.கிருஷ்ணமூர்த்தியைப்பற்றி நாம் இப்போது பார்க்கலாமா!

இப்போது சொல்லப்போகும் விஷயம் என்பது கடலின் சிறு மிகச் சிறிய துளியளவே ஆகும். இன்னும் சொல்லபோனால் ஜே. கிருஷ்ணமூர்த்தி என்கிற மகானைப்பற்றிய இருப்பதிலேயே மிகச் சிறிய குறிப்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் இணைந்திருந்த இன்றைய ஆந்திர பிரதேசம் சித்தூருக்கு அருகேயுள்ள மதனப்பள்ளியில் 1895ம் ஆண்டு, மே மாதம் 11ம் தேதி பிறந்தார். இவர் தந்தையார் பெயர் ஜிட்டு நாராயணய்யா… தாயார் சஞ்சீவம்மா ஆவார்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஆசாரம் மிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பத்து வயதாகும்போது தாயார் காலமானார்.

தந்தை நாராயணய்யா அடையாறு தியோஸபிகல் சொசைட்டியில் வேலைக்காக சென்னையில் வந்து குடியேறினார். மேடம் பிளாவட்ஸ்கி என்பவரால் தொடங்கப்பட்டு அன்னிபெசண்ட் அம்மையார் அவர்களால் தொடங்கப்பட்டது.

நவீன விஞ்ஞான உலகிற்கேற்ப சத்தியத்தைப்பற்றி போதிக்க உலக ஆசான் அல்லது உலக ஆசிரியர் இன்னும் சொல்லப்போனால் ஜகத்குரு ஒருவர் வரப்போகிறார் என்று the secreat doctrine என்கிற புத்தகத்தில் பிளாவட்ஸ்கி அவர்களால் கணிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து தியோஸபிகள் சொசைட்டியினர் இவ்வாறு ஆன்மீகம் மற்றும் நம் உடலைத் தாண்டி மனதைத் தாண்டிய ரகசியங்களை அறிய வல்லவர்களை ஒருங்கிணைத்தது. அதில் ஒருவர்தான் C.W. லெட்பீட்டர்.

ஒருநாள் மாலை அடையாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்களை கண்டார். அதில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தியை கண்டார். அந்தச் சிறுவனின் முகமும் அந்த உடலிலிருந்து தோன்றிய ஆராவும் அவரை வியப்புக்குள்ளாக்கியது.

தியோசோப்பிகல் சங்கத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயா உலக ஆசான் இவரே என்ற முடிவுக்கு வந்தார். உடனே அந்த சிறுவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அறிந்து

சங்கத்தினருக்கும் அடையாளம் காட்டினார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சகோதரரான நித்யாவிற்கும் கிருஷ்ணாஜிக்கும் நெருக்கமான பிணைப்பு இருந்தது.

இருவரையும் வெளிநாட்டிற்கெல்லாம் அழைத்துச் சென்று அன்னிபெசண்ட் படிக்க வைத்தார். கிருஷ்ணாஜி அவரை அம்மா என்றே அழைத்தார்.

இவரை உடல்தாண்டிய அனுபத்திற்கு எடுத்துச் சென்று ஹுதுமி போன்ற திபெத்த்தில் வாழும் குருமார்கள் முன்பு அமரவைக்கப்பட்டார். லீட் பீட்டருக்கு எப்படியாவது இவரை உலக ஆசானாக்க வேண்டுமென்பதற்காக எல்லா முயற்சிகளையும் செய்தார். அது கிருஷ்ணாஜிக்கு எங்கோயே தவறு என்று பட்டது. அவரும் தகுந்த சமயத்திற்காக காத்திருந்தார்.

இதற்கு நடுவே order of the star என்கிற அமைப்பை ஏற்படுத்தினார்கள். இதன் பொருட்டு ஜே. கிருஷ்ணமூர்த்தி பல்வேறு உரையை வழங்கினார். இதற்கு நடுவே அவருக்கு உடல் தாண்டிய மனம் தாண்டிய பல்வேறு விதமான ஆன்மீக அனுபவங்கள் ஏற்பட்டன. இதை அவர் process என்று அழைத்தார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியாவிலுள்ள ஓஹாய் பள்ளத்தாக்கில் ஒரு இடம் அமைத்து அங்கேயே தங்கினார்.

ஒருநாள் தன் சகோதரர் மற்றும் சுற்றியுள்ளவர்களை அழைத்து அருகிலிருந்து மிளகு மரமான pepper tree அடியில் அமரவைக்கப்பட்டார். அவர் உடல் நேராகியது. கண்களை மூடினார். அவரச் சுற்றிலும் ஒளி பரவியது. அவரின் முகம் அந்த ஒளியினால் ஜொலித்தது. தீவிரமாக தன்னுள் ஆழ்ந்தார். சட்டென்று தன் உடலிலிருந்து வெளியேறினார். தன் உடல் அமர்ந்திருப்ப்பதையும் தான் உடலுக்கு அப்பாலும் இருப்பதையும் அறிந்தார். இந்த நிகழ்வானது தனது புலன்களுக்கு அப்பால் உள்ளதை காட்டியது.

அதை நான் இங்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்குகிறேன்.

இந்த மாபெரும் அனுபவத்தை கிருஷ்ணாஜி அன்னி பெசண்ட் அம்மையாருக்கும் எழுதுகிறார்.

‘’On the first day while I was in that state and more conscious of the things around me, I had the first most extraordinary experience. There was a man mending the road; that man was myself; the pickaxe he held was myself; the very stone which he was breaking up was a part of me; the tender blade of grass was my very being, and the tree beside the man was myself. I almost could feel and think like the road mender, and I could feel the wind passing through the tree, and the little ant on the blade of grass I could feel. The birds, the dust, and the very noise were a part of me. Just then there was a car passing by at some distance; I was the driver, the engine, and the tires; as the car went further away from me, I was going away from myself. I was in everything, or rather everything was in me, inanimate and animate, the mountain, the worm, and all breathing things. all day long I remained in this happy condition.

I was supremely happy, for I had seen. Nothing could ever be the same. I have drunk at the clear and pure waters and my thirst was appeased. I have seen the Light. I have touched compassion which heals all sorrow and suffering; it is not for myself, but for the world. Love in all its glory has intoxicated my heart; my heart can never be closed. I have drunk at the fountain of Joy and eternal Beauty. I am God-intoxicated.

என்று தன்னுடைய ஞானானுபவத்தை பகிர்ந்தார்.

‘‘அனைத்துமாகவும் எந்த சத்தியம் உள்ளதோ அதை நான் அறிந்தேன். இந்த எல்லாமாக இருந்தேன் என்பதற்கான விளக்கத்தையே மேலே, அங்கு சாலையை போடுபவனாகவும், அவர் கையில் இருக்கும் கருவியாகவும், அங்கிருக்கும் மரங்களாகவும், பறவைகளாகவும், மரங்களை தழுவிச் செல்லும் காற்றையும் சிற்றெரும்புகளையும் என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு ஓசையும் என்னுள் ஒரு பகுதியே. எல்லாவற்றிலும் நான் வியாபித்திருந்தேன். எல்லாமே என்னில் இருந்தது. நான் கண்டுகொண்டேன்.

ஆனந்தத்தின் உச்சியில் திளைத்தேன். எதுவுமே முன்பு இருந்ததைப்போல் இருக்கவில்லை. இருக்கவும் முடியாது. வாழ்க்கை எனும் நீருற்றின் தெளிந்த தூய்மையான நீரை பருகிவிட்டேன். எனது தாகம் தணிந்தது. இனி என்றுமே எனக்கு தாகம் என்பது இல்லை. என்னை என்றும் அறியாமை எனும் காரிருள் சூழாது. அனைத்து துக்கங்களுக்கும் இன்னல்களுக்கும் அருமருந்தான காருண்யத்தை நான் ஸ்பரிசித்து விட்டேன். இது எனக்கு மட்டுமல்ல. உலகிற்கே உரித்தானது. நான் கடவுள் வயப்பட்டு உவகையில் திளைக்கிறேன்’’

மேற்கண்ட வரிகள் அவரின் சரிதத்தில் இடம்பெற்றுள்ளன, இவை அனைத்துமே அவராலேயே சொல்லப்பட்டன.

இதை விட தன்னுடைய ஞானானுபவத்தை ஒருவர் எப்படி தெள்ளத் தெளிவாக சொல்ல முடியும்.

https://open.spotify.com/episode/0AwhVIgoBei85x0tKpAYLK…

#TheConversation

#storytelling

#philosophy

May be a black-and-white image of 3 people and beard