
தமிழில் : க.மோகனரங்கன்
–
ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பாக,
கணப்பொழுது
தனது காதலியை
ஏறிட்டுப்பார்த்த
ஒரு கவிஞர்
அவரது கண்கள்
நீரால் நிரம்புவதை
உணர்ந்தார்
அவரது வாய்
ஒரு புன்னகையாக
மலர்வதை உணர்ந்தார்.
அந்தக் கவிதையை
நீங்கள் உரக்கப் படிக்கும்போது –
உங்களுக்குள் அவை
எந்த ஆழத்திலிருந்து
இப்போது எழுகின்றன?
உங்கள் கண்களில்,
அந்தக் கண்ணீரும்
அதேப் புன்னகையும்.
