
நேற்று ஒரு கவிதை படித்தேன்
அது ஒரு வாழ்வியல் கவிதை
இன்றுஅது நினைவில் வந்தது
இப்போது அது
பாதி தான் புரிந்தது
மீதி புரியவேயில்லை
எப்படியும் மீதியும்
புரிந்துவிடும் என்று
நான் அதன் பாதியிலேயே நின்று கொண்டிருந்தேன்
நான் அனாதைபோல் பாதியில் நின்றது
அந்தக் கவிதைக்கு
வலித்திருக்கும் போல
சட்டென்று என் நினைவிலிருந்து குதித்து
வெளியே போய்விட்டது
