
“என்ன இது இங்கேயும் வந்திட்டீங்க” என்று மெல்லியக்குரலில் முணுமுணுத்த கோபண்ணாவின் பக்கத்தில் அவர் அமர்ந்திருந்த பார்க் பெஞ்சில் தானும் அமர்ந்துக் கொண்டு புன்னகையுடன் “சும்மா உம்மை பார்க்கத்தான் வந்தேன்” என்றார் கடவுள்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற திருப்தியுடன் கடவுளை பார்த்த கோபண்ணா “சதா உன்னையே நெனச்சுக்கிட்டிருக்கும் எத்தனையோ பேர விட்டுட்டு உம்மீது துளியும் நம்பிக்கையில்லாத என்னை ஏன் துரத்தரீங்க.. .இப்படி மத்தவங்களுக்கு புலப்படாத உம்ம கூட நான் பேசரத பார்க்கரவங்க என்ன லூசுன்னு நினைக்க மாட்டாங்களா” என்று கேட்க கடவுள் சிரித்தபடி சைகையால் சுற்றி பார்க்க சொல்ல திரும்பி பார்த்த கோபண்ணா திடுக்கிட்டார்
அருகில் அமர்ந்து இருந்தவர்கள் எழுந்து போவதையும், கடந்து போகிறவர்கள் தன்னை திரும்பி பார்த்தபடி செல்வதையும் கண்டவர் தன்னை மறந்து உரக்க பேசி விட்டோமோ என்று நொந்து போனார்
“என்ன கோபி உடம்பு சரியில்லையா ஏன் தனியா புலம்பிக்கிடிருக்க” என்றபடி அருகில் வந்த நண்பர் மாலியை பார்த்து அசடு வழிந்தார் கோபண்ணா. மாலியும் “சரி சரி முதல்ல நீ வீட்டுக்கு போ’ என்று கூறிவிட்டு நகர்ந்தார். அவர் கொஞ்சம் எட்டிபோனதும் கடவுளை பார்த்து கோபண்ணா கோபமாக “இப்ப திருப்தியா உமக்கு” என்றார்..
சென்றுக்கொண்டிருந்த மாலி குரலை கேட்டு திரும்பி பார்த்தார் கோபண்ணா “ஒன்னுமில்ல நீ போ” என்று கூற மாலி சிறிது தயக்கத்துடன் நின்று பார்த்து விட்டு பின் நடந்தார்.
“நல்ல நண்பர்” என்ற கடவுளை பார்த்து முறைத்த கோபண்ணா “நண்பர்தான் ஆனால் வில்லங்கமான ஆள் தோண்டி எடுத்துடுவான் எதோ அவசரம் இன்னைக்கு அதான் போயிட்டான்” என்றார்.
ஆனால் வில்லங்கம் வேலையை காட்டிவிட்டது.சில நிமிடங்களில். கோபண்ணாவின் மகன் முரளி வேகமாக வந்து “அப்பா என்ன ஆச்சு?
மாலி மாமா போன் பண்ணி என்னென்னமோ சொல்றார்” என்று படபடத்தான்.”சரி வீட்டுல போய் பேசிக்கலாம்” என்று அவரை தர தரவென்று இழுக்காத குறையாய் அழைத்துக்கொண்டு ஓடினான் .
போகும்போது கோபண்ணா திரும்பி பார்த்தார் கடவுளை அங்கே காணவில்லை..
மனநல டாக்டர் சடகோபன் முன் கோபண்ணாவும் முரளியும் அமர்ந்திருந்தனர்.அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்ட டாக்டர் முரளியை பார்த்து “நீங்க வெளியில இருங்க நான் சார்கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்” என்று சொல்ல முரளி வெளியே போய் அமர்ந்தான்.
டாக்டரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லிக்கொண்டு வந்த கோபண்ணாவிற்கு ஒரு கட்டத்தில் தன் சரித்திரத்தையே கூறி விட்டதாக தோன்றியது.
இறுதியாக பிரச்சனைக்கு வந்த டாக்டர் “எத்தனை நாளா நீங்க இப்படி தனக்கு தானே பேசறீங்க” என்று கேட்டார்.
“இல்லை நான் எனக்கு நானே பேசரதில்ல” என்று இழுத்த கோபண்ணா
“அப்படின்னா யாருகிட்ட பேசறீங்க” என்ற டாக்டரிடம் தயங்கி தயங்கி “கடவுளிடம் “என்றார்.
“வெரிகுட் வெரிகுட் என்ற டாக்டர் ஆமாம் நீங்கதான் நான் நாத்திகன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்னு சொன்னீங்களே.உங்கள தேடி எதற்கு கடவுள் வந்தாராம்” என்று கேட்க
“அதைத்தான் டாக்டர் ஒவ்வொரு தடவையும் கடவுள் கிட்ட கேக்கிறேன் அதுக்கு அவரோட சிரிப்புதான் பதிலாக வருது” என்றார் கோபண்ணா.
சிறிது நேரம் தொடர்ந்த உரையாடலுக்கு பின் டாக்டர் “சரி நீங்க கொஞ்சம் வெளியில இருங்க உங்க பையன வரச்சொல்லுங்க” என்றார்
கோபண்ணா வெளியே சென்ற சில நொடிகளில் முரளி உள்ளே வந்து டாக்டர் முன் அமர்ந்து அவர் முகத்தை பார்க்க “மிஸ்டர் ஒன்னும் பயப்படறத்துக்கில்ல வெரி வெரி ஏர்லி ஸ்டேஜ் ஆப் ஸ்கிசோஃப்ரினியாதான் அதாவது மனச்சிதைவு ஐந்தாறு சிட்டிங்ல குணமாயிடும் வாரம் ஒரு நாள் வந்தா போதும் .மருந்தும் எழுதி தாரேன் விடாம சாப்பிட சொல்லுங்க நார்மலா ஆயிடும்” என்றார். முரளி நன்றி கூறிவிட்டு கிளம்பினான்.
வாராவாரம் தவறாமல் முரளி கோபண்ணாவை கவுன்சிலிங்கிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தான் ஐந்தாறு என்றது நீண்டு பத்தை தாண்டிக்கொண்டிருந்தது இந்நிலையில் ஒருநாள் வழக்கம்போல் கோபண்ணாவை க்ளினிக்கில் விட்டு விட்டு சென்ற முரளி சிறிது நேரம் கழித்து அவரை திருப்பி அழைத்துப்போக வந்தான்.
டாக்டரின் அறை வாசலருகே அமர்ந்திருந்த தன் தந்தையிடம் “முடிஞ்சுதா போகலாமா” என்றவனிடம் கோபண்ணா “இன்னும் பாக்கலப்பா யாரோ உள்ள இருக்காங்க” என்றார்
சரியென தலையை ஆட்டியபடி அவரருகே அவனும் அமர்ந்துக் கொண்டான்.நேரம் கடந்துக் கொண்டிருந்தது .கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமையை இழந்து கொண்டிருந்த முரளி டாக்டரின் கதவருகே போய் நின்றுக்கொண்டு உள்ளேயிருநது வரும் குரல்களை கவனித்தான். டாக்டர் குரல் மட்டுமே கேட்டது. ஃபோனில் பேசுகிறார் போலும் என்றெண்ணியவன் தயக்கத்துடன் கதவை மெதுவாக தட்டிவிட்டு “மே ஐ கம் இன்” என்று கேட்டபடி கதவை கொஞ்சமாய் திறந்து தலையை நீட்டினான்.
டாக்டர் இவனை கவனித்தமாதிரியே தெரியவில்லை.வெற்றிடத்தை பார்த்தபடி மும்முரமாய் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். .திகைத்து போன முரளி குரலை கணைத்து டாக்டர் என்று அழைத்தான்.டாக்டரின் கவனம் திரும்பவில்லை.சில நிமிடங்கள் சிலையாய் நின்றவன் பின் சுதாரித்துக்கொண்டு வெளியே
வந்து கோபண்ணாவை அவரது கேள்விகளுக்கு பதிலேதும் கூறாது அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
உள்ளே டாக்டர் “அந்த கோபண்ணா தான் கடவளுகிட்ட பேசரதா சொன்னப்ப நான் அத நம்பவில்லை அவர மனநோயாளின்னு
நெனச்சேன் அதிலேயும் தன்னை நாத்திகன்னு சொல்லிகிட்டப்ப நிலமை ரொம்ப மோசம்னு
முடிவு பண்ணி வைத்தியம் பார்க்க
ஆரம்பிச்சேன்.உஙகள பார்த்தப் பிறகுதான் நான்தான் மடையன்னு
புரியுது என்று.சொல்ல கடவுள் சிரித்தார்
இப்படிதான் எல்லாத்துக்கும் சிரிப்பீங்கன்னு கோபண்ணா சொல்லுவார். என்ற டாக்டர் இப்ப வருவார் வந்ததும் அவர் கிட்ட மன்னிப்பு கேட்கனும் என்றார்
அதுக்கு இனி வாய்பில்லை சடகோபா என்று கடவுள் சிரிக்க ஏன் ஏன் என பதறினார் டாக்டர்
அவர் மகன் அவரை வேறு நல்ல டாக்டரிடம் காட்ட அழைத்துச் சென்று விட்டான் என்றார் கடவுள்
.(விஞ்ஞானி)
விஞ்ஞானி
f2/20,முத்துமாரி அம்மன் கோவில் தெரு, ஜானகி நகர் அனெக்ச், வளசரவாக்கம் ,சென்னை.600087. கைபேசி.9444324320
மின்னஞ்சல்.. akvvingnani@gmail.com akvvingnani@gmail.com

மனச்சிதைவு.
ஒரு அருமையான, சிறந்த, நாம் கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தை சற்றே ஹாசியத்துடன் தொட்டுச் செல்கிறது,சொல்கிறது .
1. ஒரு சில வயதானவர்களுக்கு ஒரு மாயதோற்றம் அதாவது (hallucination) வருவது இயற்கை. அதில் நம்ம கோபண்னாவுக்கு கடவுளே வந்தது அவர் செய்த புண்ணியம்.
2. பொதுவான, மனித இயல்பான,அடுத்தவன் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் காதபத்திரம் நண்பர்-மாலி.
3. நான் ” கலை புதிது ” வாட்சப்பில் DON’T BE A BAT” என்ற தலைப்பில் சொன்னது போல, பிறர் தங்களது குறைகளை அல்லது கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, இடையில் ஒரு வேலி போட்டுக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அவர்களது நிலை நம்மிடமும் ஒரு பாதிப்பை உண்டுப ண் ணும் என எழுதியிருந்தேன்.
அத்தகைய ஒரு நிலையை தான் நான் மனோநிலை மருத்துவரிடம் பார்க்கிறேன்.
மனநல மருத்துவர் சடகோபனையே மாற்றும் அளவு கோபண்ணாவில் மாயதோற்றம். மனநல மருத்துவர் மிகவும் மென்மையானவர் போலும்.
கடவுள் கதாபாத்திரம், சான்ஸ் இல்ல, நரதரை மிஞ்சிவிட்டார்.
படைப்பாளி, விஞ்ஞானி இளையவரோ முதியவரோ தெரியவில்லை, எப்படியிருந்தாலும், வாழ்த்துவதில் தவறில்லை எனவே,
அருமை, வாழ்க வளர்க
வாசகன்
தர்மராஜன் குமார்
ஐயா
தங்களின் ஆழ்ந்த கருத்துக்களுக்கும்
வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த
நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
அன்பன்
விஞ்ஞானி