கவிஞர் இளம்பிறை முக நூல் பதிவு

திரைப்பட இயக்குனரும் எடிட்டருமான பி.லெனின் அவர்கள், அழுக்குப் படிந்த கிழிந்த ஆடைகளுடன் சாலைகளில் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, எங்கு பார்த்தாலும் அவர்கள் அருகில் சென்று பேச்சுக் கொடுத்து ‘சாப்பிடுகிறாயா… பிரியாணி வேணுமா?’ எனக்கேட்டு பிரியாணியும் தண்ணீர் பாட்டிலும் வாங்கி வந்து சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்து, தண்ணீர் பாட்டிலையும் திறந்து கொடுத்து, பரிவோடு சாப்பிட வைப்பதைப் பார்த்து நான் கண் கலங்கியிருக்கிறேன்.

‘மனநிலைதான் பாதிக்கப்பட்டிருக்கு… வயிறு பசிச்சுக்கிட்டேதானே இருக்கும்’ என்பார் அவர். இவ்விஷயத்தில் இப்போது நானும் அவரைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறேன். முன்னெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து பயந்து விலகிச் சென்று கொண்டிருந்த நான், இப்போது அவர்கள் பக்கத்தில் சென்று, என்னால் இயன்ற சிறுதொகையை அவர்கள் கைகளில் திணிப்பேன். அவர்கள் அவசர அவசரமாக பக்கத்திலிருக்கும் டீக்கடைக்கோ, இட்லிக் கடைக்கோ செல்வதைப் பார்க்கும்போது துயரம் நெஞ்சை அடைப்பது போலிருக்கும் எனக்கு.

One Comment on “கவிஞர் இளம்பிறை முக நூல் பதிவு”

  1. வணக்கம்,

    எல்லோரும் சொல்வார்கள் எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம் என்று.

    ஆனால் அந்த சிரசையும் ஆட்டிப்படைப்பது ஒரு சாண் வயிறு தான்.

    இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது.

    உண்மை அதுதான்.

    வயிற்கு தெரியாது தன்னை தாங்கியிருக்கும் மனிதன் மனநிலை பாதிக்கப்பட்டவனா இல்லையா என்று.

    மற்ற பொதுநல பணிகள் போல், இவர்களையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

    அதை திரு. B லெனின் அவர்கள் முன்னோடியாக இருந்து செய்து காண்பித்திருப்பது, பாராட்டுக்கு உரியது.
    நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று.

    இதை நாம் அறியச் செய்த திரு. கவிஞர் இளம்பிறயனுக்கு மிக்க நன்றி.

    வாசகன்
    அன்புடன்
    தர்மராஜன் குமார்

Comments are closed.