
.
.
மூச்சுப்பயிற்சி என்பதையும் கூட வலிந்து வலிந்து செய்யாது மூச்சைக் கவனித்துக் கொண்டே இருக்கிற போது மனம் சீர் பெறுகிறது .
மனமும், மூச்சும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. மூஞ்சைக் கவனிப்பது என்பது எளிதல்ல.
அதற்கு இடையுறாது முயற்சி செய்ய வேண்டும். மனம் மூச்சில் இருந்து தப்பித்து போய் வேறு சில விஷயங்களில் மாட்டிக்கொண்டு அலைமோதும்.
அப்போது மறுபடியும் மூச்சுக்கு மனதைக் கொண்டு வர வேண்டியது அவசியம் .
ஆரம்ப நாட்களில் இப்படி இடையூறாது செய்தோமைனால், பிறகு எப்போதும் மூச்சிலேயே மனம் இருக்கப் பழகிக் கொள்ளலாம்.
மூச்சிலேயே கவனமிருக்க மனம் மிக அழகாகப் பக்குவப்பட ஆரம்பிக்கும்.
இதைச் சொல்லி விளக்க முடியாது . இது ஒரு தனித்த சுகம். இது ஒரு ஆழ்ந்த அமைதி. பேரானந்தத்தின் திறவு வாசல்.
இதை அனுபவிக்கும் போதுதான்
உணர முடியும்.
என்னால் முடியுமா இப்படியெல்லாம் தியானம் செய்ய முடியுமா என்று
உடனடியாக கேள்வி வரும் .
இது கரையில் நின்றுகொண்டு எனக்கு நீச்சல் வருமா என்று கேள்வி கேட்பது போன்றது.
மூச்சைக் கவனிக்கத் தனித்திருத்தல் அவசியம்.
தனித்திருக்கும் போது
மூச்சை கவனித்து விட முடியுமா ?
கொஞ்சம் பசித்திருந்தாலும் அவசியம் நன்றாக உண்டுவிட்டு தனித்திருந்தால் தூக்கம்தான் வரும் . பசித்திருத்தல் மட்டும் போதுமா. இல்லை . விழித்திருக்கவும் வேண்டும்.புத்தி விழிப்பாக மூச்சை கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.
பாதி இப்படி ஒரு யோசனை, பாதி அப்படி ஒரு யோசனை இல்லாமல் புத்தி முழுவதும் மூச்சைப் பற்றியே நின்று கொண்டிருந்தால், அதன் மீது அமர்ந்து கொண்டிருந்தால் , அதையே கவனித்துக் கொண்டிருந்தால், மூச்சிலிருந்து அந்த புத்தி நழுவி மனதிற்குப் போவதை தெளிவாக உணரலாம்.
மனதை உற்றுப் பார்க்கப் பார்க்க மனம் கரைந்து நழுவிய இடத்தில் வேறொரு விஷயமும் தோன்றும் . அதை விவரிக்க முடியாது. என்ன சொன்னாலும் அது குறை உள்ளதாகவே முடியும்.
குரு வழி
பாலகுமாரன்.
