
கத்திரி
வெயிலின்
ஒரு நாள்
கடந்தோம்
….
….
என்று ஒரு
கவிதை எழுத
அமர்ந்தேன்,
கடும் கோடை வெயில்
நடுவே
….
வானம்
இருண்டு
சூறைக்காற்று
பலமாக
வீச
தூரலாக
ஆரம்பித்து
மழையும் வந்தது
நின்று பெய்தது
மனம் மகிழ்ந்தது..
நின்றபின்
சூட்டைக் கிளப்பலாம்
இயற்கை
சிரிக்கும் நேரம்
