
(இன்று கவி அரங்கத்தில் வாசித்த கவிதை )
கண்ணைத் திறந்தேன்
எதிரில் நீ தெரிந்தாய்
கண்ணை மூடினேன்
கண்ணிலும் நீ இருந்தாய்
கண்ணைத் திறந்தால்
எதிரில் நீ
கண்ணை மூடினேன்
கண்ணிலும் நீ
திரும்பவும் கண்ணைத் திறந்தால்
எதிரில் நீ இல்லை
திரும்பவும் கண்ணை மூடினேன்
கண்ணிலும் நீ இல்லை
எதிரிலும் நீ இல்லை
ஏன்?
நானும் இல்லை
