அழகியசிங்கர்/ விதி

(இன்று கவி அரங்கத்தில் வாசித்த கவிதை )

  விதி எல்லா இடங்களுக்கும் செல்லும்
கேளிக்கை அதன் நோக்கம்
துயரம் உள்ளவர்களைத் துன்புறுத்திப் பார்ப்பது
அதன் எண்ணம் இல்லை
என்று முன்னால் நம் முன்னால் முணுமுணுக்கும்
துயரம் உள்ளவர்களுக்குத் தெரியும்
உண்மையில்லையென்று
நோயாளி
மரணத்தை எதிர்பார்க்கிறானா
விதி விளையாடும்
மரணம் ஏற்பட்டால்
உயிரை இழுத்துக்கொண்டு போகும்
தொடரும் வாழ்வை
கனவுகளுடன் காணும் மானுடன்
வாழ்க்கையை அடித்துச் சிதைக்கும்

விதி
அதனைக் கேள்வி கேட்கும்
உரிமை உங்களுக்கில்லை