லக்ஷ்மி ரமணன்/எலியும் வலியும்


வீட்டு முன் வராண்டாவில் உட்கார்ந்து யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டி
ருந்த தீபக் திடீரென்று “அம்மா சீக்கிரம் வா”
என்று அலறினான்.
பயந்துபோன லலிதா சமைப்பதை நிறுத்தி
கேஸ் அடுப்பை அணைத்துவிட்டு “என்ன
ஆச்சு தீபக்?” என்று பதட்டத்துடன் கேட்டவாறு
வராண்டாவுக்கு விரைந்து வந்தாள்?
“அதோபாரு எலி”
“இதுக்கா என்னவோ புலியைப்பார்த்தவன்
மாதிரி கத்தினே?”
என் தட்டில் இருந்த ரொட்டியை தூக்கிக்கிட்டு
எலி ஓடிடுச்சு”
“ஏன் நீ எலி வந்ததைகூட பார்க்கலியா?”
இல்லை என்று தலையசைத்தான் தீபக்.
லலிதா வுக்கு நம்பமுடியவில்லை. இதுவரை
எலியை அவள் வீட்டில் யாரும் பார்த்ததில்லை
மூன்றாவது மாடிக்கு எலி எப்படி வந்தது?
அவள் குழப்பம் அதிகமாகும்வகையில்
அன்றிலிருந்து எலி தினம் வீட்டில் நுழைந்து
ஏதாவது ஒருபொருளைக்கடித்துவிட்டுஉடனே
ஓடிவிடும்.
லலிதாவின் ரவிக்கை,தீபக்கின் ஷர்ட், டவல்,
தினேஷின் வேஷ்டி என்று பட்டியல் நீண்டு
கொண்டேபோனது.
அதுமட்டுமல்ல. வெளியே இருந்தபழம், கறிகாய் எதையுமே அது விட்டுவைக்காமல்
கடித்துக்குதறியது.
அதை எப்படியாவது பிடித்துத்துரத்தினால்
தான் பிரச்சினைக்குதீர்வுகிடைக்கும் என்பது
உறுதியான நிலையில்அன்றுமாலையில்
வாக்கிங் போனதினேஷ் திரும்பிவந்ததும்
“லலிதா நம்மகிட்டே இருக்கிற எலிக்கூட்டை
கொண்டுவா”என்றான்.
தான் உணவகத்திலிருந்து வாங்கிவந்ததை
மேஜைமீதுஎடுத்து வைத்தான்.
அதை ஆவலாகப்பிரித்துப்பார்த்த தீபக்
“வடையா வெரிகுட். எனக்கு ரொம்பபிடிக்கும்”
“உனக்குமட்டுமல்ல எலிக்கும் வடைரொம்ப
பிடிக்கும்.”
“எலி வீட்டுக்குவந்தால்தான் எனக்கு வடை
கிடைக்குமா?”
” உனக்கு வாங்கும்போதுதான் எனக்கு எலி
ஞாபகம் வந்தது வா சாப்பிடு” வடையை
மட்டுமல்ல அவனுக்காக வாங்கிவந்திருந்த
பாதாம் ஹல்வாவையும் தினேஷ் தன் மகன்
கையில் திணித்ததும் அவன் பூரித்துப்போய்
“தேங்க்யூ அப்பா”என்றான்.
அன்று இரவு எலிக்காகவும் கூண்டில் வடை
செருகி வைக்கப்பட்டது.
மறுநாள் காலையில் வடைக்கு ஆசைப்பட்டு
கூண்டுக்குள் மாட்டிக்கொண்ட எலி வெளியே
வரமுடியாமல் டக்டக் என்று குடைந்த சப்தம்
அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.
“ஏம்பா எலிக்கு வடைபிடிக்கும்னுஉங்களுக்கு
எப்படித்தெரியும்”
“அதைவிடு. வெளியே தோட்டத்தில் ரெண்டு
பூனைகள் எப்பவும் உலாவிக்கிட்டிருக்கு.
அதுங்க கிட்டே மாட்டிக்காமல்எலியை கீழே
கொண்டுபோய் வெளியில்விடணும்.
எலி செத்தால் நிம்மதிதானே அதற்காக அப்பா ஏன் கவலைப்லபடுகிறார். தீபக்புரி
யாமல் திகைத்தான்.
கீழேஇறங்கிவந்து தோட்டத்திலிருந்த சுவருக்கருகில் கூண்டைத்திறந்ததும் தினேஷ் பயந்தபடியே அது நடந்தது.
சுவர்மீது சற்றுதூரத்தில்உட்கார்ந்திருந்த பூனை எகிரிக்குதித்து எலியைப்பிடிக்கப்
பார்த்தது. தினேஷ் குறுக்கேபாய்ந்து எலியை
மடக்கி பின்னோக்கித்தள்ளிவிட அது ஓடி
விட்டது.
சுவரில் கை இடித்ததால் அதில் லேசான
காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது.
“என்னங்க இது எலியைக்காப்பாத்துவதற்கு
யாராவது தன்னையே காயப்படுத்திப்பாளா?”
லலிதா விரைந்துவந்து தினேஷின்காயத்தை
கைக்குட்டையால் துடைத்துவிட்டாள்.
“என் கண்எதிரில் ஒரு உயிர் போவதைப்
பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க
முடியாது. அது எலியானாலும்சரிபுலியானா
லும்சரி. அதன் விளைவாக நான் காயப்பட்டு
வலிஎனக்கு கிடைத்த பரிசு. ஒருஉயிர்காப்பாற்றப்பட்டுவிட்டதே”என்ற
தினேஷைதீபக்கும் லலிதாவும் பெருமையுடன் பார்த்தார்கள்.

                                J