விஞ்ஞானி/Artificial intelligence

இருட்டில் இடித்துக்கொண்டேன்
எதில் என்று தெரியவில்லை
வெளிச்சம் வந்ததும் பார்த்தேன்
எதிரில் எதுவும் இல்லை

செயற்கை நுண்ணறிவிடம்
இருட்டில் இடித்துக்கொண்டது
எதன் மீது என்று கேட்டேன்

நீ இடித்துக்கொண்டது
இருட்டின் மீதுதான்
என்று பதில் வந்தது