
பல்லாயிரம் ஆதங்க அலைகள், மனித மனதில்;
பள்ளு பாட விடாமல் பரிதவிப்பு மனதோரத்தில் !
பெண்ணின் ஆதங்கம் கல்வி !
இளைஞனின் ஆதங்கம் பணி நிரந்தரம் !
பெற்றோரின் ஆதங்கம் பிள்ளைகள் கரையேற்றம் !
பாட்டியின் ஆதங்கம் ஊன்றுகோல் மேல் !
பால்காரர் ஆதங்கம் கறவை மாடு மேல் !
நடிகையின் ஆதங்கம் முன் நெற்றி நரை !
நடிகனின் ஆதங்கம் பட வெளியீடு !
பூசாரியின் ஆதங்கம் ஊர்த் திருவிழா !
யாசகனின் ஆதங்கம் அன்னதான நேரம் !
செல்வந்தரின்
ஆதங்கம்
கோடிகளின் மேல் !
வறியவனின் ஆதங்கம் வயிற்றுப் பசி !
முடிவிலா ஆதங்க அலை ;
மன நிறைவு கொள் ;
அலையில்லா ஆனந்தப் பொய்கையாகும் மனது !
