
இது கோடைமழை
குடை எடுத்துப் போ
குழந்தை மாதிரி நனைந்துவிடாதே
பின் குளிரெடுக்கும்
காய்ச்சல் வருமென்கிறாள் அம்மா .
ஒரு மழையில் நனையாமலிருக்க
அம்மாவிடம் ஆயிரம் உப்புச்சப்பில்லாத காரணங்கள் இருக்கிறது
போகட்டும் விடுங்கள் அம்மாவும்
அம்மாவின் காரணங்களும்
பூவரசங்கன்றை ஊன்றி வைத்த
எனக்கும் பூவரசங்கன்றுக்கும்
இது கொடை மழை
தாராபுரம்
