அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 93

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
 மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம். 
ஜெகன் : ஒரு வழியாக முடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே..
அழகியசிங்கர் : ஆமாம்.   அகோசமித்திரன் நினைவாக வைத்த போட்டிகளில் 153 கதைகள் கிடைத்தன.  27 கதைகள் முக்கியமான கதைகளாக எடுத்தேன்.  மீதி 64 கதைகள் ஆன் லைனில் வெளியிடலாமென்று எடுத்து ஒவ்வொன்றாய் வெளியிடுகிறேன். நல்ல அனுபவம்.
மோகினி : தேர்ந்தெடுக்கும்போது தடுமாறி விட்டீர்களா?
அழகியசிங்கர் :  மூன்றாவது பரிசு தேர்ந்தெடுக்கும்போதுதான் தடுமாறி விட்டேன்.
மோகினி :  எப்படி?
அழகியசிங்கர் : ரமேஷ் கல்யாண் எழுதிய என்னவோவாக என்பது. 

எல் கோபாலகிருஷணன் எழுதிய கிணற்றுப் பூனை, ஆர்.வெங்கடேஷ் எழுதிய மரணமடைந்தவனின் நண்பன் என்ற மூன்று கதைகளுக்கும்தான் போட்டி. மரணமடைந்தவனின் நண்பன் கதை சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், மரணம் பற்றிய கதைகள் அதிகமாக வந்திருந்ததால் அதைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இரண்டாவதாகச் சிறப்பான கதையாகக் கிணற்றுப் பூனை கதை இருந்தது. ஆனால் என்னவோவாக என்பது கதையைத்தான் மூன்றாவதாகத் தேர்ந்தெடுத்தேன். ஏன் என்ற கேள்வி எழும். ரமேஷ் கல்யாண் என் அடுக்ககத்தில் ஏற்பட்ட அனுபவத்தைக் கதையாக எழுதி உள்ளார். என்னைப் போல அவரும் அந்தத் தொழிலாளிக்கு அதிகப் பணம் கொடுத்து அனுப்புகிறார். 3வது இதுதான் என்று தீர்மானித்தேன்.
ஜெகன் : ஆன் லைனில் கதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களே?
அழகியசிங்கர் : பல போட்டிகளில் கதைகள் அனுப்புவார்கள் ஒரு சில கதைகளை முக்கியத்துவம் கொடுத்து மற்றக் கதைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். என் விஷயம் அப்படி இல்லை. என்னுடைய இணையம் பத்திரிகைகளுக்குக் கதைகள் வேண்டும். தினமும் ஆன் லைன் பத்திரிகையில் கதைகளை வெளியிடுகிறேன். இதையும் புத்தகமாகக் கொண்டு வருவேன்.
மோகினி : ஆன் லைனில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் எதுமாதிரியான கதைகள்.
அழகியசிங்கர் : பத்திரிகைக் கதைகள். பத்திரிகைக் கதைகளை நாம் வரவேற்க வேண்டும். தீவிரமான கதைகள் மட்டுமல்ல பத்திரிகைக் கதைகளும் முக்கிய பங்காற்றுகின்றன.
மோகினி : ஆன் லைனில் வெளியிட வேண்டாமென்று யாராவது சொன்னார்களா?
அழகியசிங்கர் :இரண்டு நண்பர்கள் சொன்னார்கள். ஒருவர் வெளிப்படையாக முக நூலில் எழுதி விட்டார். அதனால் 5 பேர்கள் ஆன்னைலில் என் கதைகள் கொண்டுவர வேண்டாமென்று சொல்லிவிட்டார்கள். இது எனக்கு வருத்தம். தனிப்பட்ட முறையில் இதைத் தெரிவித்திருக்கலாம். நான் இணையத்தில் கதையைப் பதிவு செய்வதோடல்லாமல் புத்தகமாகக் கொண்டு வருவேன். ஆன்லைனில் 200 பேர்கள் தினமும் பார்க்கிறார்கள். ஏற்கனவே போட்டியின் போது ஆன் லைனிலும் கதைகள் கொண்டு வருவேனென்று கூறியிருந்தேன். வேண்டாமென்று சொன்ன நண்பருக்கு என்ன கோபமோ தெரியவில்லை.
ஜெகன்: இப்போது அவருக்கு ஏன்டா சொன்னோமென்று தோன்றியிருக்கும்.
அழகியசிங்கர். உண்மைதான்.
மோகினி : உங்கள் கடுமையான முயற்சிக்கு வாழ்த்துகள்.
அழகியசிங்கர் நன்றி
மோகினி : இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. தொடர்ந்து நாளை பேசலாம்.
அழகியசிங்கர் : குட் நைட்.

22.05.2025

3 Comments on “அழகியசிங்கர்/ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 93”

  1. ஓ! கதைகள் தேர்ந்தெடுப்பதில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளனவா? தாங்கள் மூன்றாம் பரிசுக்குரிய கதையை தேர்ந்தெடுக்கப்பட்ட சிரமத்தைத்தான் சொல்கிறேன்.

Comments are closed.