ரவி அல்லது/ஏக்கப்பொழுதான பயண சாஸ்வதங்கள்

ஓட்டுநர் தினம்:

விடிபொழுதின்
முன் பகுதி
தொடங்கி
விடாது
பயணிக்கிறது
வாழ்க்கை
அலுவலெனவும்
அகங்காரத்துக்கெனவும்
ஆசைக்கெனவுமாக
நேரத்தையும்
நிம்மதியையும்
கரைத்து
ஈட்டலும் செலவுமாக
எப்பொழுதும்.

மூச்சுக் கயிற்றின்
முடிச்சு
இறுகும் முன்
அன்றாடங்கள்
ஒருவரின் கையில்
அனாயசமாக
ஒப்புக்கொடுக்கப்பட்டு
ஓடுகிறது
யாதொரு
பயமற்றதாக
பயணங்கள்.

விலை
வைக்க முடியாதது
உயிரென்றாலும்
வேதனையாகத்தான்
இருக்கிறது
எங்கும்
ஓட்டுநருக்கு
ஊதியத்தை
கொஞ்சம்
கூட்டிக் கொடுப்பதற்கு

தயங்கும்
அரசுகளையும்
அதன்
மக்களையும்
நினைக்கும்பொழுது.
*

01/06/25.
12:47ம.