லாவண்யாசத்யநாதன்/ நிகர்

புழுதி புழுக்கம்
வாகன நெரிசல்
சிறிய சந்தில்
விமான வேகத்தில்
வரும் ஸ்கூட்டர்
வழி மறிக்கும் மாடு
குறுக்கே ஓடும்
பாதசாரி
துரத்தி வந்து
பின்வழியில் ஏறும்
வாலிபக்கிறுக்கன்
இத்தனை நடுவிலும்
விபத்தில்லாமல்
அரசு பேருந்து ஓட்டும்
ஓட்டுநருக்கு நிகராய்
பூமிதனில்
யாருமில்லையிஸ்ஸையே!