
ஒரு மிடறு நீர் போதும்
என் விடாய் தணிந்து விடும்.
ஒரே ஒரு சொல் போதும்
என் வெறுமை களைய,
ஒரே ஒரு பார்வை போதும்
என் உயிர் துளிர் விட,
ஒரே ஒரு தொடுகை போதும்
என் நம்பிக்கை நீள,
நீ நீயாக இருந்தால் மட்டும்.

ஒரு மிடறு நீர் போதும்
என் விடாய் தணிந்து விடும்.
ஒரே ஒரு சொல் போதும்
என் வெறுமை களைய,
ஒரே ஒரு பார்வை போதும்
என் உயிர் துளிர் விட,
ஒரே ஒரு தொடுகை போதும்
என் நம்பிக்கை நீள,
நீ நீயாக இருந்தால் மட்டும்.