
சாம்பல் பூசி கிடந்த
அதிகாலை வானத்தை
சிறகுகளால்
துடைத்தபடி பறக்கும் பறவையைப் போல்
28-மாடி கட்டடத்தின்
சன்னல் கதவுகளை
கயிற்றில் கட்டி
துடைத்துக்
கொண்டிருக்கிறான்.
அவன் பறவையாதல்
இந்த சமூகம்
விதிக்கப்பட்டவையா?
அவன் ஏற்றுக் கொண்டவையா?
ஏதோவொன்று
எவ்வளவு கடினங்களையும்
உதறிவிட்டு
பறக்கும்
சிறகுகள் இருந்தால் போதும்
துலங்கும் ஒளிக்கீற்றுகள்
அவன் வானில்
