
14.06.2025
ஆசிரியர் பக்கம்
மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அவர்கள் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்
மோகினி: வணக்கம்.
அழகியசிங்கர் : வணக்கம்.
ஜெகன் : ஏன் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்?
அழகியசிங்கர் : நேற்று மதியத்திலிருந்து அப்படித்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்.
மோகினி : நேற்று நடந்த கோரமான விமான விபத்தா?
அழகியசிங்கர் : ஆமாம். இப்படி ஒரு விபத்து நடந்திருக்கக் கூடாது.
மோகினி : நம் சக்திக்கு மீறியது. நாம் என்ன செய்ய முடியும்?
அழகியசிங்கர் : உண்மைதான். ஆனால் இது மாதிரியான அதிர்ச்சியான சம்பவம் நடக்கும்போது நம் நிலையும் சற்று குலைந்து போய் விடுகிறது.
ஜெகன் : ஜேயதேவன் என்ற கவிஞர் இறந்து விட்டாரே?
அழகியசிங்கர் : ஆமாம். இந்தச் சோகத்தோடு அதுவும் ஒரு சோகம்.
மோகினி : ஒன்றும் செய்ய முடியாது.
அழகியசிங்கர் : ஆமாம்.ஒன்றும் செய்ய முடியாது. நம் கையில் எதுவுமில்லை.
மோகினி : உங்கள் கதை சுவர் அந்திமழையில் வெளிவந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
அழகியசிங்கர் : ரவி பேலட் ஓவியங்கள்தான் சிறப்பு. என்னையும் அசோகமித்திரனையும் ஓவியத்தில் பிடித்துப் போட்டுவிட்டார். அவருக்கு நன்றி.
ஜெகன்: நீங்கள் கொண்டுவரப் போகும் உங்கள் சிறுகதைத் தொகுப்புக்கு, ரவி பேலட்டையை எல்லாக் கதைகளுக்கும் வரையச் சொல்லலாம்.
அழகியசிங்கர் : அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரைக் கேட்க வேண்டும்.
மோகினி : நீங்கள் போட்டி முடிவை அறிவித்து விட்டீர்கள். எப்போது புத்தகம் கொண்டு வரப் போகிறீர்கள்.
அழகிய சிங்கர் : அதற்கான முயற்சியை வேசமாகச் செய்து கொண்டு வருகிறேன். இரண்டு விதமான புத்தகங்கள் கொண்டு வருகிறேன். 1. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள். 2. இணையத்தளத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்.
மோகினி : நல்ல விஷயம்.
அழகியசிங்கர் : விருட்சம் அச்சிதழிலும் பரிசுப் பெற்ற கதைகளை வெளியிடலாமென்று நினைக்கிறேன்.
மோகினி : இரவு 9.30 மணி ஆகிவிட்டது. கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.
அழகியசிங்கர் : குட் நைட்.
(இரவு 9.30 மணி)
