அழகியசிங்கர்/அப்பா

அப்பா
சைக்கிளிலிருந்து
கீழே விழுந்து விட்டார்
மேட் இன் இங்கிலாந்து
சைக்கிள்
40 ஆண்டுகளுக்கு முன்
வாங்கியது
எழுந்திருக்க முடியவில்லை
தெருவில் யாரோ
கொடுத்த பிளாஸ்டிக்
நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்
டீயைக் குடித்தபடி
வலியுடன்
இடுப்பில் எலும்பு முறிவு
திரும்பத் தீவிர
சிகிச்சைக்குப் பிறகு..
எல்லாம் சரியான பிறகு
முதல் விஷயமாகச்
சைக்கிளைத் தானம் செய்து விட்டார்

எனக்கு 60 வயதுக்குப்
பிறகு சைக்கிளே ஓட்ட வரலை.

One Comment on “அழகியசிங்கர்/அப்பா”

Comments are closed.