விஜயலக்ஷ்மி கண்ணன் /தந்தையர் தினம்

ஒரே ஒரு தினம் மட்டுமே
போதுமா தந்தையின் பெருமை பேச?

இன்று என்னுடன் நீங்கள் இல்லை
என்றாலும் உங்களை நினைக்காத நாள் இல்லை.
அப்பா, உங்கள் பாசம் கொண்ட நெஞ்சம்
கண்ணில் தெரிந்த உங்கள் கண்டிப்பும்
இப்பவும் பசுமை யாக நினைப்பில்.

குடும்பத்தின் அசையா இரும்புத் தூண் அல்லவோ
எனக்கு சாய்ந்து கொள்ள திட தோள் கொண்ட
அப்பா எப்படி நீங்கள் மண்மீது சாய்ந்தீர்கள்?

காலங்கள் மாறும்
கோலங்கள் மீறும்
சீலங்கள் மட்டும் நீங்கள் காட்டிய வழி தான்.

என் நெஞ்சம் நிறைந்த தந்தை
என் கண்ணில் ஒரு காவல் தெய்வம்
என்றும் என்றும் நான் உங்கள் கண்ணின் மணி.

15.06.2025