
அடிக்கடி உதிர்த்த சொற்களில்லை…
ஆனால் அடிமனதில் இருக்கிறது.
நீயும் கோவலன்தான்…
என்தாய் கண்ணகிக்கு குழந்தையாய் நானிருந்தேன்.
உன்னிடம் கற்றுக்கொண்டது
எப்படி வாழக்கூடாது என்பதுதான்.
தந்தையர் தினத்தில் எத்தனையோ நினைவுகள்…
அவரவர் தந்தையை உயர்த்திப்பிடித்திருக்கும்.
எனக்கும் இருக்கிறது…
நீ என்னை அடித்ததில்லை….
திட்டியதில்லை.
எல்லோருக்கும் எல்லாத்தந்தைகளும்
கைபிடித்துச்சென்றதில்லை…
அதுவாய்க்காத குழந்தைகள்
எத்தனை எத்தனையோ…
ஆயிரம் இருக்கட்டும்..
என்பிறப்பு அவதாரமில்லை…
சாதாரணம்…
மிகச்சாதாரணம்.
என்னைக் கலைக்காமல் காத்துநின்றாயே…
அதற்காகவே ஒருகோடி வணக்கங்கள்.
♦

அபாரம்!
mqx6mt
uityqm