சசிகலா விஸ்வநாதன்/அப்பா

அப்பாவின் பெயர்
கிருஷ்ண மூர்த்தி
என்றுயாருக்கு தெரியும்?
ப்ரூக் பாண்ட் ஐயர்
லேடிஸ் பைக் ஐயர்
டீ கார ஐயர்
என்பவரை மதுரை ஜில்லா முழுதும் அறியும்.

காடு மேடெல்லாம்
இரவும் பகலும்
தேயிலை விற்பனையாளராக பணி.
வெயிலும் அறியாமல்
மழையும் அறியாமல் டீ கடைகளில்
‘ ப்ருக் பாண்ட் டீத்தூளை’ சப்ளை
செய்து தூள் கிளப்பினார்

டீ குடிக்காதவர்களை அவருக்குப் பிடிக்காது.
அம்மா டீ தான் குடிப்பார்.
நான் காஃபி’ ப்ருக் பாண்ட் காஃபி.

வார சம்பளம் வாங்குவதில் மிகவும் பெருமை.
மாத சம்பளக் காரனைவிட
அவருக்கு ஒரு வார சம்பளம் அதிகம் அவருக்கு.

இப்படி அவர் சம்பாதித்தே
நான் முதுகலை வரை பயின்று
மாத சம்பளம் வாங்கும்
அரசு வேலையில் அமர
அவர் சொன்னது:

‘ஒரு வார சம்பளம் குறைவுதான் உனக்கு;
ஆனாலும்
அரைக்காசென்
றாலும்
அரண்மனைக் காசு உனக்கு
உறங்கும் வரை
உட்கார்ந்து சாப்பிடலாம்’

ஆம்!
நான் இப்போது உட்கார்ந்தே சாப்பிடுகிறேன்;
இன்று
என் குழந்தைகள்
பறந்து சாப்பிடும் போது.

2 Comments on “சசிகலா விஸ்வநாதன்/அப்பா”

  1. அப்பாவின் மனவலிமை போலவே அவரோடஉடல்வலிமை ஒத்துழைத்தது.. சுறுசுறுப்பு ஆங்கிலத்தில்சொல்லணும்என்றால்
    உன்னோடஅப்பா SMART. Super அப்பா

Comments are closed.